பக்கம்:முத்துச் சிப்பி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

நின்றிருந்தார்கள். நடுத்தர வயதுடைய பெண்களில் ந லலந்து பேர், மற்றும் குழந்தைகளின் கூட்டம்,

என்ன விஷயம்?' என்று விசாரித்தார் கல்யாணம் அமைதியை இழக்காமல்.

என்ன விஷயமா? இந்தப் பையன் தினம் குளிப் தற்கு எங்கே போகிறான் என்று உமக்குத் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே பாலுவைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு முன்னாலே வந்தார் சேஷாத்ரி

என்கிற ஒரு பெரியவர்.

கல்யாணம் பாலுவை ஏற இறங்கப் பார்த்தார். தண்ணிரில் நனைந்து, பாதி உலர்ந்ததும் உலராததுமாக இருக்கும் கிராப்புத் தலை. இடுப்பிலே அரைநிஜார் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. பயத்தால் அவன் இரு திருவென்று விழித்து எல்லோரையும் பார்த்தான்.

இதற்குள்ளாக இந்த இரைச்சலைக் கேட்டு பவானி யும் வெளியே வந்தாள். அவள் வெளியே வராமல் இருந் தால் அதிகமாகப் பேச்சு வளராமல் போயிருக்கும். பாலுவின் தாயைப் பார்த்ததும் அங்கிருந்த ஸ்திரீகளின் கோபம் அதிகமாயிற்று. 'இந்த மாதிரி ஒரு துஷ்டத் தனம் உண்டா? நல்ல குழந்தை!' என்றாள் ஒருத்தி.

'குழந்தையை வளர்க்கிற லட்சணம் அப்படி!" என்று குழந்தை வளர்ப்பைப்பற்றி விமரிசனம் செய்தாள் மற்றெ ாருத்தி.

'அடியே! கேட்டதில்லையோ நீ! கைம்பெண் வளர்த்த மகன் கழிசடை என்று' என்று ஒருத்தி எல்லை மீறிப்பேச ஆரம்பித்தாள்.

பவானி பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்தாள். கைம்பெண்ணாக இருந்தால் அவள் தான் பெற்ற கு முந்தையைக்கூட வளர்க்க அருகதை அற்றவளாகப்