பக்கம்:முத்துச் சிப்பி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

கூப்பிட்டே?” என்று மற்றொரு பையன் அதை ஆட்சே பித்தான்.

கல்யாணராமனுக்கு விஷயம் விளங்கி விட்டது. எல்லோருமாகத் தான் கிணற்றில் இறங்கி அமர்க்களம் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் பழி சுமத்துவதற்குப் பாலு ஒருவன் தான் அகப்பட்டான் அந்த ஊராருக்கு!

""ょrsr庁!** என்று சேஷாத்ரியைக் கூப்பிட்டார் அவர்.

இதிலே பெரியவர்கள் சண்டை போட விஷயமே ஒன்றும் இல்லை. கிணற்றங்கரையில் இவர்கள் பேசிக் கொண்டு கிணற்றிலே இருக்கும்போது ஒரு கட்சியாக இருந்தார்கள். நடுவில் ஏதோ சண்டை வந்து விட்டது. இப்பொழுது இவர்களுள் ஒரு எதிர்க் கட்சி ஆரம்பிக் றொர்கள். இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவார்கள். குழந்தைகள் சண்டையில் நாம் தலையிடுவது அவ்வளவு உசித மில்லை என்று கல்யாண ராமன் கூறியதும் அங்கு வேடிக்கை பார்க்கக் கூடியிருந்தவர்களுக்கு சண்டை சப் பென்று போய் விட்டது. ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றார்

    • / tJTT .

பீதியினால் உலர்ந்த வாயுடன் பாலு வாசல் குறட்டி லேயே தயங்கி நின்றான். கல்லாய்ச் சமைந்து நின்ற பவானி அவனைக் கோபத்துடன் உருட்டி விழித்துப் பார்த்தாள். 'வாசற்படி தாண்டி நீ உள்ளே வா சொல்கிறேன்! " என்கிற பாவம் அவள் முகத்தில் தெரிந்தது.

கல்யாணம் பாலு வையும் பவானியையும் கவனித் த . பிறகு கண்டிப்புடன் 'உள்ளே போய் ஈர நிஜா ரை அவிழ்த்து விட்டு வேறு போட்டுக் கொள். இனிமேல்