பக்கம்:முத்துச் சிப்பி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

கிணற்றிலும் குளத்திலும் இறங்காதே. உனக்கேனடா இந்த வம்பெல்லாம்? என்று கூறிவிட்டு உள்ளே போய் விட்டார்.

'பாலுT! என்று அழைத்தாள் பவானி.

தலையைக் குனிந்து கண் ணிரை மாலை மாலைய க உதிர்க்கும் அவனைப் பார்த்து அவள் மறுபடியும். 'பாலு ! உன்னாலே நான் இந்த ஊரிலே மரியாதை யுடன் வாழ முடியாது போல் இருக்கே என்றாள் வெறுப்புடன்.

' கூப்பிடுகிறேன். பேசாமல் நிற்கிறாயேடா! வாடா உள்ளே!' என்று அவன் கைகளைப் பற்றித் தர தர வென்று இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். விம்மி விசும்பிக் கொண்டே பாலு உள்ளே போனான்.

அடுத்த வீட்டுத் திண்ணையில் நின்று இது வரையில் இந்தச் சண்டையைக் கவனித்து வந்த மூர்த்தி, பவானி யின் வீட்டுக்குள் சென்றான். அங்கே கூடத்தில் கையில் பிடித்த விசிறிக் காம்புடன் பாலுவை மிரட்டிக் கொண் டிருந்தாள் பவானி. ஒன்றிரண்டு அடிகள் விழுந்து அவன் விலாப்புறத்தில் வரிகள் தென்பட்டன. அவை களைத் தடவிட் பார்த்து அழுது கொண்டிருந்தான் பாலு.

பவானியின் முகத்தில் கோபமும் துயரமும் நிரம்பி யிருந்தன. ஒன்றும் தெரியாத பாலகன். t_JIT :¡ @`) t j t'i பிடிக்கும் யசு துடிப்பு நிறைந்த சுபாவமுடையவன். அவனைக் கண்டால் ஊராருக்கு ஆகவில்லை. எல்லாக் குழந்தைகளும் அப்படித் தான் இருக்கிறார்கள் . புளியந் தோப்பின் நுழைந்து புளியம்பழம் உலுக்குகிறார்கள். கிணற்றில் குதித் து அமர்க்களம் பண்ணு றொர்கள் . ஆனால் அவர்களைப் பற்றியெல்லாம் ஊரில் வம்பு கிளம்புவதில்லை. இந்தக் குழந்தை செய்யும் ஒவ்வொரு