பக்கம்:முத்துச் சிப்பி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

விஷமத்தையும் அவர்கள் பூதக் கண்ணாடி வைத்துப் புகார் செய்யவும் வந்து விடுகிறார்கள். ஏன்?

'ஏன்? என்று பவானி வாய்விட்டு உரக்கவே கேட்டுக் கொண்டாள் தன்னையே. அவள் பேச ஆரம் பித்ததும் மூர்த்தி சுவாதீனத்துடன் அங்கிருந்த ஊஞ்ச லில் வந்து உட்கார்ந்து கொண்டு , 'ஏனா? இந்த ஊரில் இருப்பவர்களுக்கே வயிற்றெரிச்சல் அதிகம். புத் சாலி யாக ஒரு குழந்தையைப் பார்த்தால் இவர்களுக்கு ஆகிறதில்லை. இந்த விஷயம் உங்களுக்குப் புதிசு. எனக்குப் புதிசல்ல என்றான்.

வலுவில் வந்து பேசியும் அவனுடன் பேசாமல் இருந் தால் மரியாதைக் குறைவு என்று நினைத்து பவர்னி பதில் கூறினாள்.

  • பாலு எவ்வளவோ சாதுவாக இருந்தான். இப்பத்தான் ஒரு வருஷமாக அவன் பண்ணுகிற விஷமம் சகிக்கவில்லை. இவனை வைத்துக்கொண்டு நான் படுகிற பாடு கொஞ்சமல்ல. ஊரிலே தகப்பன் இல்லாத பிள்ளை என்று இளப்பம் வேறே. *

மூர்த்தி திடுக்கிட்டு பவானியை ஏறிட்டுப்பார்த்தான். களை பொருந்திய அந்த நெற்றி குங்குமத்தை இழந்தம் தன் அழகை இழக்கவில்லையே என்று நினைத்தான். மருட்சியோடு மிரளும் அந்தக் கண்களில் குறும்பும். பரிகாசமும் மிதக்க வேண்டிய காலமல்லவா இது! அவை சதா சோகத்திலும், சஞ்சலத்திலும் ஆழ்ந்து நிற்பது அவனுக்கு வேதனையாக இருந்தது.

பெண்தான் தன்னை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ள முடிகிறது! காதலொருவனைக் கைப் பிடித்த வுடன் அவளுடைய சிரிப்பிலே, பேச்சிலே, நடையிலே அவள் செய்யும் ஒவ்வொரு வேலையிலே புது மாதிரி

யான, மாறுதல்களைச் சிருஷ்டித்துக் கொள்கிறாள் .