பக்கம்:முத்துச் சிப்பி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பள்ளிப் பெண்ணாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வெடுக் வெடுக்கென்று பேசித் திரிந்தவள் பேச்சிலே இட் போது இனிமை மிதந்து செல்கிறது. கலகல வென்று சிரித்துக் கும் மாளமிட்ட கன்னி, காதலனைக் கண்ட வ டன் புன்சிரிப்புச் சிரித்து அவன் உள்ளத்தை : கொள்ளை கொள்கிறாள். எத்தனையோ புதுமை1 பெண்கள் நிமிர்ந்து நடப்பவர்கள் எல்லாம் காதலனைக் கண்டால் கடைக் கண்ணால் தான் பார்க்கிறார்கள். ஆனால்......பெண்ணைத் துயரம் பற்றிக் கொள்ளும் போது அவள் எப்படி மாறிவிடுகிறாள்?

பவானியின் கண்களிலிருந்து கண்ணtர் உருண்டு கன்னத்தில் வழிவதைப் பார்த்தான் மூர்த்தி.

'நீங்கள்...' என்று ஏதோ கேட்க ஆரம்பித்தவன், 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டு முடித்தான்.

""ஆமாம். பாலுவுக்கு அப்பா இல்லை. அதனால் தான் அவனை ஊரில் யாருக்குமே பிடிக்கவில்லை. ஒன்றுக் குப் பத்தாக அவன் மேல் குற்றங்கள் வருகின்றன. அதற்கு நான் என்ன செய்யட்டும்?' என்றாள்.

அதற்கு மேல் பவானியின் கண்களிலிருந்து பிரவாகம் பெருகியது. அடுப்பங்கரையிலிருந்து அவள் விசும்புவது. வெகு நேரம் வெளியே உட்கார்ந்திருந்த மூர்த்திக்குக் கேட்டது.

9. மொட்டைக் கடிதம்...!

வாசல் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கல்யாணராமன் , மூர்த்தி

■ לדין - E He __ = *T = m அடுத்த விட்டுக்கு ள் ளிருந்து வெளியே வருவதைப

பார்த்து இடுக்கிட்டார் 1 மூர்த்தி ஒருவரிடம் அனுதாபம் காட்டுகிறான் என்றால், அதில் சுயநலம் கலந்து இருக்