பக்கம்:முத்துச் சிப்பி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சொந்த வாழ்வில் ஏற்படும் சோகங்களால் பலரும் சோர்ந்து விடுகிறார்கள். வீணாகி விட்ட வாழ்வையெண்ணிக் குமைந்து கொண் டிருப்பதால் தமக்கும் தம்மைச் சார்ந்தவர் களுக்கும்-ஏன் பூமிக்குமே பாரமாகத் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டு அல்லல்படுகிறார்கள்.

கை நழுவிப் போய்விட்ட ஒன்றை எண்ணிக் கலங்கிக் கொண்டிராமல், வாழும் காலம் வரை பிறர் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு விட்டால் பிறவியெடுத்ததற்கு ஒர் அர்த்தம் தானாகவே ஏற்பட்டு விடும். அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் என்பது ஆன்றோர் வாக்கு.

பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் படைக்கப்பட் டிருக்கிறார்கள். அதை உணர்ந்து செயல் பட்டால் ஒவ்வொருவரும் தம் வாழ்வைப் பய னுள்ளதாகச் செய்து கொள்ள முடியும்.