பக்கம்:முத்துச் சிப்பி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 8

என்ன ஐயா! ஒரு நாளைப் போல மாட்டுக்கு எதிரே சைக் கிளை ஒட்டு lங்க?' என்று வண்டிக்காரன் அலுத்துக் கொண்டான்.

'சைக்கிள் மேலேயே விடப்பா நீ. இப்படிப் பட்ட வங்களுக்கு தயை காட்டக் கூடாது என்று கூட அவள் தன் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டாள். மூர்த்திக்கு அவள் வாய் திறந்து பேசியதே பிரும்மானந்தமாக இருந்தது.

வண்டிக்காரன் வண்டியை அவன் மேல் ஏற்றினால் கூடத் தேவலை என்று நினைத்து அந்தப் பாக்கியத்துக் காக அவன் காத்துக் கிடந்தான். அதன் பிறகு அந்த யுவதி நேராகவே அவனிடம் தைரியமாகப் பேசினாள்.

"மிஸ்டர் 1 பாதை உங்களுக்குத் தான் சொந்தம் என்று நினைத்துக் கொள்கிறீர்களே. அது சுத்தத் தவறு ! என்று கண்டித்தாள் அவள் . கோபத்தினால் சிவந்த அவள் முகம் பக மலைக் கிராமத்தில் இருக்கும் குளத்தில் அலர்ந்திருக்கும் செந்தாமரையை நினைவூட்டி யது அவனுக்கு .

மூர்த்தி திடு திப்பென்று ஒரு முடிவுக்கு வந்தான். அவனுடன் அவள் தைரியமாகப் பேசுகிறாள். அவன் அவள் வண்டியின் பின்னாலேயே சைக் கிளை ஒட்டி வரு வதைப் பார்த்து ஒரு தினு சாகக் சிரித்திருக்கிறாள். வெட்டும் ஒரு பார்வையை அவன் பக்கம் விசி விட்டு அவள் பாதையின் வேறு பக்கம் பார்த்தவாறு முகத் தைத் திருப்பியிருக்கிறாள். ஒருவேளை மூர்த்தியின்

மேல அவளுக்குக் காதலோ என்னவோ?

இப்படி நினைத்தவுடன் அவன் உள்ளம் மகிழ்ச்ச்ெ கடலில் நீந்தியது. அந்தத் தாமரை முகத்தாள் அவ னைக் காதலிப்பது என்றால் அது சாமான் ய விஷய மில்லை அல்லவா? ஆகவே மூர்த்தி கடைசியாக அவ