பக்கம்:முத்துச் சிப்பி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

ளுக்குக் காதல் கடிதம் எழுதத் துணிந்தான். நறுமணம் ஊட்டிய அக் கடிதத்தை ஒரு தினம் அவள் வண்டிக்குள் வீசி எறிந்து விட்டு சைக் கிளை வேகமாகச் செலுத்திக்

கொண்டு காலேஜூ க்குப் போய்விட்டான்.

மாலை அவன் வீடு திரும்பியதும் கல்யாணம் அவனை, வாடா குழந்தை என்று என்று மில்லாமல் வரவேற்றார். அத்தோடு விட்டு விடாமல், உனக்கு இதெல்லாம் எத்தனை நாட்களாகப் பழக்கம் ! என்று கேட்டும் வைத்தார். விட்டிற்குள்ளிருந்து பார்வதி வெளியே வந்தாள். அவன் பட்டவர்த்தனமாக, ஏண்டா அப்பா ! ஊரிலே எங்களை மானத்தோடு வாழ விட மாட் டாய் போல் இருக்கிறதே? " என்று கேட்டாள்.

அந்த வயசிலே காதல் கடிதம் எழுதுவது அவ்வளவு தவறு என்று யாருமே சொல்ல மாட்டார்கள். "இந்த மாமாவுக்கும் மாமிக்கும் நம்மைக் கண்டால் ஆகவில்லை. எதாவது சொல்கிறார்கள். அந்த அசட் டுப் பெண் இதை யெல்லாம் பெரியவர்களிடம் சொல் லுவாளோ? என்று நினைத்தான் மூர்த்தி. அந்தப் பெண்ணின் தாய் சற்று முன்பு வீட்டுக்கு வந்ததும் அவனுடைய திருவிளையாடல் களைக் கூறி அந்தக் கடிதத்தைக் காண்பித்ததையும் அவன் அறியவில்லை. அவசரப்பட்டு எதுவும் பேசக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தவனாக மூர்த்தி அன்றிலிருந்து பதினைந்து தினங்கள் வரையில் அந்தப் பெண்ணின் எதிரில் போகாமல் நடந்து கொண்டான்.

ஒரு தினம் மூர்த்தி காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்த தும் கல்யாணராமன், * ரண்டா! அந்தப் பெண் ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதாமே? உன் காதல் எல்லாம் ஊதலாகி விட்டது. பார்த்தாயா? இதற்குத் தான் யோசனை இல்லாமல் நடக்கக்கூடாது என்கிறது .

என்றார்.