பக்கம்:முத்துச் சிப்பி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 O

மூர்த்தி ஸ்தம்பித்து நின்றான். அவன் கால்கள் பூமி யில் புதைந்து போன மாதிரி ஆடாமல் அசையாமல். நின்றன.

"என்ன ! அவளுக்குக் கல்யாண மா?' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். உடலில் இருக்கும் ரத்தமெல்லாம் மூளைக்கு விறு விறு என்று ஏறிற்று. எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும். என்று துடித்தான். மூன்று நாட்கள் சரிவரச் சாப்பிடாமல் ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் திரிந்தான். அவளுக் கும் தன்னிடத்தே காதல் உண்டு என்று நினைத்து தன்னைத்தான் ஏமாற்றிக் கொண்டான் அவன். அவனி டம் தனக்கு உதித்தது உண்மையான காதலா அல்லது அந்த வயதின் சேஷ்டையா என்று அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை.

கல்யாண வீட்டில் அமளி. மாலையில் மாப் பிள்ளை அழைப்பு ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, மாப்பிள்ளைப் யைபனிடம் ஒரு சிறுவன் கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போனான். கடிதத். தின் வாசகம் ஒன்றும் பிர மாதமான விஷயம் இல்லை. இருந்தாலும் அந்தப் பெண்ணை மணக்கப் போகிறவ னு க்கு அது பிரமாதமாகத்தான் தோன்றியது.

நண்பரே.

தாங்கள் மணக்க முன் வந்திருக்கும் பெண் ஏற்கனவே என்னால் காதலிக்கப்பட்டவள். மனத்தை ஒருவன டம் பறி கொடுத்து விட்டு அவள் உங்களிடம் உள் ளன்புடன் எப்படித்தான் வாழ்க்கை நடத்தப் போகி றாளோ? யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். '

என்பதுதான் கடிதத்தின் சாரம். இம்மாதிரி பயமுறுத்தல் கடிதங்களும், பிதற்றல்களும் சகஜமாக இருந்தாலும்,