பக்கம்:முத்துச் சிப்பி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 I

மாப்பிள்ளை இதைப் படித்தவுடன், வெட்கமும் பயமும் அடைந்தான்.

மாப்பிள்ளை அழைக்க வீட்டில் எல்லோரும் கூடி இருந்தார்கள். மாப்பிள்ளை ஊர்வலக் காரில் ஏற மறுப்பதாகச் செய்தி வந்தது. சிறிது நேரத்துக்கு அப் புறம்தான் விஷயம் தெரிந்தது. மாப் பிள்ளைக்கு வந்த கடிதம் பெண் வீட்டாரிடம் கிடைத்ததும் எழுதியவன் யார் என்பது உடனே விளங்கிவிட்டது.

கல்யாணராமன் தம் வீட்டுக்கு வந்து இம்மாதிரி ஒரு புத்திர ரத்தினத்தை தம் சகோதரி பெற்று வைத்து விட்டுப் போனதற்காகத் தலையில் போட்டுக் கொண் டார். காதல் கடைத் தெருவிலும், காப்பி ஹோட்டல் களிலும், நடைபாதைகளிலும் விற்கப்படும் ஒரு சரக்காக மாறி இருப்பதை நினைத்து இந்த நிலைமைக்குப் பொறுப்பாளி யார் என்பது புரியாமல் திகைத்தார், தாமே நேரில் சென்று மாப்பிள்ளையிடம் பெண்ணைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் விவரமாகக் கூறி, விவாகத்துக்குச் சம்மதிக்கச் செய்து, தாமும் உட னிருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

மாமாவே பொறுப்பேற்று கல்யாணத்தை முடித்து வைத்து விட்டார். இனிமேல் தன் ஜம்பம் ஒன றும் அங்கே சாயாது என்பது புரிந்ததும் மூர்த்தி பசுமலைப் பக்கமே ஒரு வருஷத்துக்குத் தலை காட்டவில்லை.

பசுமலையில் இருக்கும்போதே இவ்வளவு கண்ணிய மாக நடந்து கொண்டவன், இப்பொழுது பம்பாய் என் றும் கல்கத்தா என்றும் பல பெரிய நகரங்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறான். மூர்த்தியின் அறிவு பல விஷயங். களைப் பற்றியும் விரிவடைந்துதானே இருக்கும்?

"பெண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறையைப் பற்றியே அறியாதவன் பவானியின்