பக்கம்:முத்துச் சிப்பி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வீட்டுக்குள் எதற்குப் போனான்? இதே தடா சங்கடம்?" என்று நினைத்துக் கொண்டு கல்யாணம் மனதுக்குள் அருவருபபும கவலையும அடைநதாா.

வெளியே வந்த மூர்த்தி மாமாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அங்கிருந்த வெற்றிலைப் பெட் டியிலிருந்து வெற்றிலையை எடுத்துப் போட ஆரம்பித்தான் . கல்யாணம் கண்ணை மூடிக் கொண்டு யோச ை யில் ஆழ்ந்து இருந்தார்.

ஏன் மாமா!' என்று அழைத்தான் மூர்த்தி.

'உ.ம்..." என்றார் கல்யானம்.

'இந்தப் பெண், பாவம் -இப்படி இந்த வயசில்... பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது மாமா...'

'பரிதாபமாக இருக்கிறதா? உம். ஏண்டா அவள் அப்படியெல்லாம் தன்னைப் பிறத்திய ர் பார்த்துப் பரிதாபப் படும்படி நடந்து கொள்ள மாட்டாள். அவளைப் போல துன்பத்தை விழுங்கிக் கொள்ளும் சக்தி

யாருக்குமே கிடையாது டா. அதெல்லாம் அவளோடு போகட்டும். நீ பேசாமல் வேலையைப் பார்த்துக்

கொண்டு போ.

எங்கே மாமா போகிறது? என் ஆபீஸிலே என்னை மதராஸ் ராஜ்யத்துக்கு டிராவலிங் வேல்ஸ் மென்னாகப் போட்டிருக்கிறார்கள். என் ஜாகை இனி மேல் இங்கேதான். மாசம் மாமியிடம் எழுபது ரூபாய் என் சாப்பாட்டுக்காகக் கொடுத்துவிடுவேன். பெற்றவர் களைப் போல் என்னை வளர்த்தவர்களை விட்டு எங்கே போகிறது 1

கல்யாணம் மூடியிருந்த கண்களைத் திறந்து அவனை நேருக்கு நேராகப் பார்தார். பிறகு கண்டிப்பு நிறைந்த குரலில்,