பக்கம்:முத்துச் சிப்பி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

'உன்னை யாரடா ஊரை விட்டுப் போகச் சொன்னது? பிறத்தியார் வம்பிலே தலையிடாமல் உன்

வேலையைக் கவனித்துக் கொண்டு இரு என்றுதானே சொன்னேன்' என்றார்.

"மாமா எப்பொழுதும் இப்படித்தான். அவருக்கு என்ன தெரியும்?' என்று நினைத்துக் கொண்டு மூர்த்தி மேலும் அவரிடம் பேச்சை வளர்த்தாமல் திண்ணையில் படுத்துத் துாங்க ஆரம்பித்தான்

10. விசிறிக் காம்பு

குழந்தை பாலுவுக்குப் பிடிக்குமே என்று செய்து வைத்திருந்த முருங்கைக்காய் சாம்பாரும் உருளைக் ழெங்கு பொடிமாசும் சமையலறையில் அடுப்பின் கீழ் ஆறிப் போய்க் கொண்டிருந்தது. பவானி கன்னத் தில்

கையை ஊன்றித் தூணில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்.

ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பாலு விசிறிக் காம்பால் பட்ட அடிகளைத் தடவிப்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். தெருவிலே சடுகுடு ஆடினால் தண்டனை. குளத்துக்குப் போனால் அடி. கிணற்றில் இறங்கினால் உதை. பள்ளிக்கூடம் திறந்திருந்தால் இருக்கவே இருக்கின்றன புஸ்தகங் களும் வாத்தியார்களும்! இவ்வளவு பெரிய லீவைத் தந்து விட்டு அதைக் கழிப்பது எப்படி என்று சொல்லித் தராமல் இருக்கிறார்களே என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தான். வயிற்றில் பசி. சற்று முன் உள்ளேயிருந்து வந்த முருங்கைக்காய் சாம்பாரின் வாசனை மூக்கைத் துளைத்தது. சாம்பார் சாதம் சாப் பிட வேண்டும் என்று அவன் நாக்கில் ஜலம் ஊறிற்று. ஆனால் பவானி அவன் நின்றிருந்த பக்கம் கூடத் திரும்ப வில்லை. என்னவோ பெரிதாக நடந்து விட்டதுபோல்

மு. சி-4