பக்கம்:முத்துச் சிப்பி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

முகத்தை உர். ரென்று வைத்துக் கொண்டு உட்கா ர்ந்து விட்டாள்.

பாலுவுக்குக் கால்கள் வலி எடுக்கவே மெதுவாக ஊஞ்சலில் உட்கார்ந்து கொண் டான் . பவானியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணிர் வழிந்து கொண்டே இருந்தது. ஊராரின் கடுஞ்சொற்கள் அவள் நொந்த மனத்தில் வேல் கொண்டு குத்தித் துளைத்தன.

பாலு தாயைக் கவனித்துக் கொண்டே ஊஞ்சலில் சாய்ந்து துரங்க ஆரம்பித்தான். பசியினால் ஏற்பட்ட களைப் பினால் அவன் அயர்ந்து துரங்கிப் போனான் . பாலு வின் உள்ள ம் விழித்துக் கொண்டது. பசுமலையை விட்டு அவனும் அவன் அம்மாவும் ரயில் ஏறி சென்னைக் குப்போகிறார்கள். அங்கே ரயிலடியில் அவனுக்குப் பிரமாதமான வரவேற்பு மாமா. நாகராஜனும் , மாமி கோமதியும், அவர்கள் மகள் சுபதியும் அவனை ஆசை யுடன் வரவேற்றுக் காரில் வீட்டுக்கு அழைத்துப் போகி றார்கள். சுமதிதான் எவ்வளவு நல்ல பெண் ! தன்னு

டைய மேஜையிலேயே பாலு வின் புஸ்தகங்களை வைத்துக் கொள்ள ச் சொல்கிறாள். தென்னுடைய

விளையாட்டுச் சாமான்கள் அவனுக்குத்தான் என்கிறாள் அவள் கண்களைச் சுழட்டிப் பேசி கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் பாலு மெய்ம்மறந்து போகிறான்.

ஏலே பையா! நீ நீச்சல் கத்துக்கொள்ள டா. உடம்புக்கு நல்லது என்கிறார் மாமா நாகராஜன்.

பவானி வியர்க்க விறுவிறுக்க வருகிறாள்.

• அண்ணா ! இந்த மாதிரியெல்லாம் அவனுக்கு இடங் கொடு க்காதே! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.

அங்கேதான் ஆற்றிலும் குளத்திலும் குதித்துக் கொண் டிருந்தானே ! போதும் அண்ணா!

அதெல்லாம் வேண்டாம் மாமா என்று பரிதாப

மாகச் சொல்லிவிட்டு பாலு சுமதியிடம், "இந்த ஊரில்ே