பக்கம்:முத்துச் சிப்பி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

விசிறிக்கு காம்பு நீளமா குட்டையா?" என்று கேட் கிறான்.

'ஏண்டா பாலு! விசிறியெல்லாம் இங்கே அடுப்பு விவிறத்தான் உபயோகப்படும். காற்று வேணுமா விக்கு: இந்தா...பட்...' என்று மின் விசிறியின் பொறியைத் தட்டி விடுகிறாள் சுமதி.

காற்று சுழன்று சுழன்று வேகமாக அடிக்கிறது. "அப்பா ! என்ன காற்று மனசுக்கு சுகமாக இதமாக இல் லையே' என்று பாலு திணறுகிறான். அந்தத் திணறலில் தவித்து பொத் தென்று விழுகிறான்.

கண் விழித்துப் பார்த்தபோது பவானியின் மடியில் படுத்துக்கொண்டிருந்தான் பாலு.

"ஏண்டா கண்ணா! உனக்குப் பசிக்கவில்லையா மணி இரண்டாகப் போகிறதே! சாப்பிட வாயேன் என்று அழைத்தாள் பவானி.

"நீயும்தான் சாப்பிடவில்லை அம்மா, உனக்குப் பசிக்காதா? வா, நானும் நீயும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம்' என்று சொல்லியபடி பாலு எழுந்து சமையலறைக்குள் புகுந்து இரண்டு தட்டுக்கன் எடுத்து வைத்துத் தானே உணவு பரிமாற ஆரம்பித்தான்.

தன. நீ கொஞ்சம் உருளைக்கிழங்கு அதிகமாகவே போட்டுக் கொள்ளடா பாலு!' என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்லிக் கொண்டே பவானி தட்டின் முன் னால் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

11. புதுப் பள்ளிக்கூடம்

சற்று முன் விசிறிக் காம்பால் பவானி தன்னை அடித் கதை பாலு அடியோடு மறந்து விட்டான். அ,ை