பக்கம்:முத்துச் சிப்பி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

மூர்த்தி பசுமலைக்கு வந்த நாட்களாக அவனைப் பற்றி அதிகம் கவலைப் பட்டவர் கல்யாணராமன் தான். நாலு இடங்களுக்குப் போய் விட்டு வந்தவன் கெளரவ மாகவும் கண்யமாகவும் நடந்து கொள்வான் என்று எதிர் பார்த்தார் அவர். ஆனால் அவனுடைய போக்கு சிறிதும் மாறவில்லை என்று தெரிந்ததும் அவர் மனம் வருந் தினார் அன்று காலையில் தெருவில் நடந்த சில்லறைச் சண்டைக்கு அப்புறம் அவர், மூர்த்தி பவானியின் வீட்டுக்குள் போய் விட்டு வந்ததை விரும்பவில்லை. "இவன் தத்துப் பித்தென்று பேசிக் கொண்டு அங்கே போ வானேன்?' என்று தான் அவர் நினைத்தார் 8 மூர்த்தி தெருத் திண்ணையில் அயர்ந்து துரங்கிக் கொண் டிருந்தபோது கல்யாணம் தாகத்துக்குச் சாப்பிட உள்ளே சென்றார். அங்கே பார்வதி வெள்ளரிப் பிஞ்சு களைத் துண்டங்களாக நறுக்கி, மிளகும் உப்பும் சேர்த்துப் பொடி செய்து அதில் துண்டங்களைப் பிசிறி இரண்டு கிண்ணங்களில் எடுத்து வைத்துக் கொண்டிருந்

தாள்.

'ஏது வெள்ளரிக்காய்? வாங்கினாயா என்ன?’ ’ என்று கேட்டுக் கொண்டே கல்யாணம் மணையில் உட்கார்ந்து கொண்டார்.

"ஆமாம். மேட்டுக் கழனியிலிருந்து அந்தப் பெண் பச்சையம்மாள் கொண்டு வந்தது. மூர்த்திதான் விலை பேசி வாங்கினான். அவன் தான் என்னமாகப் பேரம்

பேசுகிறான் என்கிறீர்கள்? அந்தப் பெண்ணிடம் குழைந்து குழைந்து பேசி வாங்கினான்' என்று மரு மகன் சமர்த்தை மெச்சி வாயாரப் புகழ்ந்து

கொண் டாள் பார்வதி.

கல்யாணத்துக்கு இதைக் கேட்கவே அருவருப்பாக இருந்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், இப்படிப்