பக்கம்:முத்துச் சிப்பி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 O

பல்லைக் காட்டும் மூர்த்தியின் மேல் அவருக்கு ஆத்திர மாக வந்தது.

'இந்தா! சிறிசுகள் வந்தால் நீ பேரம் செய்து வாங் குவாயா? மூர்த்தி வாங்கினான் கீர்த்தி வாங்கினான் என்கிறாயே! அந்தக் கல்யாண விஷயம் மறந்துவிட்ட தாக்கும் உனக்கு ! நீதான் எதையும் லேசில் மறந்து போகிறவளாயிற்றே என்று கண்டித்தார் அவர்.

பார்வதி பதில் கூறுவதற்குள் கொல்லைக் கதவை, திறந்துகொண்டு பவானியும் பாலுவும் உள்ளே வந்தா கள். பாலு கல்யாணத்தின் அருகில் சென்று உட்கார்ந்து வெகு சுவாதீனமாகக் கிண்ணத்திலிருந்த வெள்ளரி, துண்டுகளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

பவானி பார்வதியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண் டாள். சிறிது நேரம் அங்கிருந்த யாருமே பேசவில்லை. பனியன் கூடப் போடாமல் வெற்றுடம்பாக அறையில் நிஜாருடன் உட்கார்ந்திருந்தான் பாலு. காய்களை நறுக்கி முடித்ததும் அரிவாள்மனையை ஒருபுறமாக வைத்துவிட்டுத் திரும்பிய பார்வதியின் கண்களில் பாலு வின் விலாப்புறம் தெரிந்தது. வரி வரியாக விசிறிக் காம் பால் அடித்த அடிகள் அங்கே அந்தப் பொன் மேனியில் கன் றிப்போய்த் தென்பட்டன. ஒரு மகவுக்காகத் தவ மிருந்த அந்தப் பெண் உள்ளத் தில் வேதனை நிரம்பியது. பச்சைப் பாலகன், ஒன்றும் தெரியாத வயசு. இப்படி அடியும் உதையும் வாங்க அந்தக் குழந்தை செய்த தவறு த ன் என்ன என்று நினைத்துப் பார்வதி கண் கலங்கி காள். புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் , * பவானி ! குழந்தையை அடித் தா யா ? என்று கேட்டாள்.

கல்யாண ராமன் அப்பொழுதுதான் பாலு வைக் கவனித்தார். வரிவரியாகத் தெரிந்த அந்த அடிகளைப்