பக்கம்:முத்துச் சிப்பி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 I

பார்த்ததும் அவர் பவானியை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையில் பிள்ளையைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தெரிந்து இருக்க வேண்டும் எனும் பாவம் தொனித்தது. வயசான அத்தம்பதி தன்னை ஒரு தினு சாகப் பார்ப்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தாள்.

"ஆமாம் மாமி, பாலுவை அடித்து விட்டேன். ஊரார் சொன்னதை நீங்கள் கேட்டிருந்தால் நான் அடித்தது சரியா தவறா என்று தெரிந்து கொண்டிருப் பீர்கள் என்றாள் பவானி.

ஊரார் என்ன சொல்லி விட்டார்கள் பவானி? தகப்பன் இல்லாத பிள்ளை என்று தானே சொன்னார் கள். வாஸ்தவம்தானே அம்மா அது ? வாசு இருந்திருந் தால் பாலுவை நீ இப்படி அடித்திருப்பாயா?" என்று கேட்டார் கல்யாணம்.

தன்னை அடித்ததற்காக அம்மாவை எல்ல்ோரும் கண்டித்துப் பேசுவதைப் பாலு விரும்பவில்லை. ஆகவே அவன் கணிரென்ற குரலில், 'ஐ'அம்மா அடித்தால் பரவா யில்லை மாமா. அதற்குப் பதிலாக எனக்கு இரண்டு பங்கு உருளைக் கிழங்கு பொடிமாஸ் போட்டு விட் டாள். அத்தோடு என்னைக் கட்டிக் கொண்டு, ‘என் கண்ணே, ஏனடா நீ விஷமம் செய்கிறாய்?" என்று கேட்டுக் கண்ணிர் விட்டாள் என்றான் பாலு.

வெப்பத்தால் சுடும் மணல் வெளியின் அடித்தனத் திலே ஒடும் குளிர்ந்த நீரைப் போல தாயின் கருணை இதயத்தின் ஆழத்திலே தேங்கிக் கிடக்கிறது. சமயம் நேர்ந்தபோது அது பொங்கிப் பிரவாகமாக வெளியே வருகிறது. அழகிய சுனை களையும் நீர் ஊற்றுக்களையும் வறறாத ஆறுகளையும் தன் அகத்தே கொண்டிருக்கும்