பக்கம்:முத்துச் சிப்பி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பூமிதேவி, குமுறும் எரிமலைகளையும், கொதிக்கும் ஊற் றுக்களையும் கூடத் தாங்கியிருக்கிறாள். தாயின் உள்ளத் தில் கருணையும் கண்டிப்பும், அன்பும் கோபமும் ஒன்றோ டொன்று பிணைந்துதான் இருக்கும்.

அம்மா வேண்டுமென்று தன்னை அடிக்கவில்லை. ஊரார் ஏசுகிறார்களே என்று குமுறித்தான் அடித்தாள் என்பதை அந்த பிஞ்சு மனம் புரிந்து கொண்டதோ இல்லையோ? "என் கண்ணே! என்று அவள் அவனை அன்புடன் அனைத்துக் கொண்டவுடன் அவன் அடியை மறந்து விட்டான். இனிமேல் விஷமம் செய்யக் கூடாது. என்று தீர்மானித்துக் கொண்டான்.

கல்யாணராமன் தன்னையே நொந்து கொண்டார் ஒரு கணம். விரிந்த கடலைப் போல விய பித்து நிற்கும் தாயின் அன்புக்குச் சற்று முன் களங்கம் கற்பிக்க முனைந்தாா அல்லவா?

பார்வதி மட்டும் அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தேங்காய் எண்ணெயை எடுத்துப் பஞ்சில் தோய்த்து பாலுவின் விலாப் புறத்தில் தடவிக் கொடுத் தாள். பவானிக்குப் பாலுவின் விலாவைப் பார்க்கும் போதெல்லாம் இதயம் வலுத்தது.

""நாளைக்குச் சரியாகப் போய்விடும் மாமி என் றான் பாலு அலட்சியமாக .

' என்ன சரியாகப் போகிறதோ, போ : ஆடு மாடு களைக் கூட இப்படி அடிக்கக் கூடாது' என்றாள் பார்வதி சற்று உஷ்ணமாகவே.

அப்படியா மாமி! எங்க பள்ளிக்கூடத்து வாத்தி யார்கள் இதைவிடக் கேவலமாக அடிப்பார்கள். ஒரு வாத்தியா பிரம்பால் அடித்தால் வெளியே வரி வரி ய. கத தெரிந்து விடும் என்று தலையில் "நறுக்' "நறுக்