பக்கம்:முத்துச் சிப்பி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

கென்ய குட்டுவார். ஒருவர் காதைப் பிடித்துத் திருகு வா. ஒருவர் வாய்க்கு வந்தபடி ஏசுவார்' என்று பாலு தன் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். பிறகு அவன், 'மாமா, அடுத்த தடவை என்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்கள். அதைப்பற்றிக் கேட்கத்தான் நானும் அம்மாவும் இங்கே வந்தோம்" எனறான,

12. பெண்களின் சம உரிமை!

திண்ணையில் துரங்கிக் கொண்டிருந்த மூர்த்தி விழித்துக் கொண்டு சமையலறையில் இவர்கள் பேசு வதை அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இடையில் வந்து சடாலென்று பேச்சில் கலந்து கொள் வதைவிடச் சற்றுப் பொறுத் திருந்து எழுந்து போகலாம் என்று நினைத்து அங்கேயே படுத்திருந்தான். .

பாலு புதுப் பள்ளிக்கூடத்தில் சேர இருப்பது அவ னுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்த வீட்டுக்குள் போய் பவானியுடன் பேசுவதற்கு ஏதாவது ஒரு சாக்கு Gou Girl – fri dir?

பாலு கூறியதைக் கேட்டதும் கல்யாணம், 'அதற் கென்ன அப்பா. டவுனில் இருக்கும் முனிசிபல் ஹைஸ் கூலில் சேர்த்தால் போச்சு. நாளைக்குப் போய் ரைட்ட ரைக் கேட்டு டி.ஸி. வாங்கி வந்துவிடு என்றார்.

'அவனை ஏன் போகச் சொல்ல வேண்டும்? நானே போய் வாங்கி வருகிறேன் என்றாள் பவானி,

திண்ணையிலிருந்த மூர்த்தி மெதுவாகக் கூடத்தை அடைந்தான். பேச்சு சுவாரஸ்யமான கட்டல்துக்குத் திரும்புகிறது என்பதை அறிந்ததும் அடுத்தாற்போல் இருந்த சமையலறைக்குள் அவன் நுழைவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.