பக்கம்:முத்துச் சிப்பி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இது வரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பவானி தயக்கத்துடன் எழுந்து நின்றாள்.

  • நோ, நோ. நீங்கள் பேசாமல் உட்கார்ந்து கொள் ளுங்கள் இந்தக் காலத்தில் - அதுவும் ஈக்வாலிட்டி ஏற்பட்டிருக்கும் இந்த நாளில், ஒரு ஆணைப் பார்த்துப் பெண் எழுந்து நின்று மரியாதை செய்வது எல்லாம் எனக்குப் பிடிக்காது, உட்காருங்கள் என்றான் மூர்த்தி.

பவானி தயங்கிக் கொண்டே உட்கார்ந்தாள்.

'நீ பாட்டுக்கு உட்கார் பவானி. அவன் உன் உடன் பிறந்தவன் மாதிரி' என்றாள் பார்வதி.

  • சே! சே! சுத்தத் தவறு ! உடன் பிறந்தவன் எதிரில் உட்காரலாம்; அன் னியன் எதிரில் உட்காரக் கூடாதாக் கும்! - பெண்கள் சுதந்திரம், சம உரிமை எல்லாம் சும்மா பேச்சளவிலே இருக்கிறதே தவிர, நடை முறையில் வரக் காணோமே" என்று அலுத்துக் கொண்டான் அவன் .

'அதெல்லாம் நடைமுறையில் வருவதற்கு முன்பு வாலிபர்களின் மனம் நன்றாகப் பண்பட வேண்டும். அது தெரியுமா உனக்கு மூர்த்தி? பேச்சிலே ஒழுங்கு இருந்தால் மட்டும் போதாது. செய்கையிலும் நடத்தை யிலும் ஒழுக்கமும் பண்பாடும் நிரம்பி இருக்க வேண்டும். அது எல்லோரிடமும் இருக்கிறதா அப்பா? பெண்களை நிமிர்ந்து பார்க்காமல் போகிறவனை அசடன் என்றும், அப்பாவி என்றும் கேலி செய்கிற காலம் ஆயிற்றே இது?

என்றார் கல்யாண ராமன் .

மூர்த்தியின் முகம் "சட் டென்று வாடிப் போயிற்று. என்ன மாமா இது? நான் ஏதோ பேசப் போக நீங்கள் என்னவோ சொல்லுகிறீர்களே என்று பேச்சை மாற்றி னான் .