பக்கம்:முத்துச் சிப்பி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

பவானிக்கு இந்தப் பேச்செல்லாம் பிடிக்கவில்லை. -பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்து ரைட்டரிடமிருந்து டி. வி வாங்குவது சிவனை நேரில் தரிசித்து வரம் வாங்கும் விஷயமாகவல்லவா இருக்கிறது?’ என்று கவலைப்பட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

தலையைக் குனிந்து சிந்தனையில் மூழ்கி இருந்த பவானியின் தோற்றத்தை மூர்த்தி தன் ஒரக் கண்கள்ால் அளவெடுத்துக் கொண்டான். கனகாம்பர வர்ணத்தில் மெல்லிய கரை போட்ட கைத்தறிப் புடவையை உடுத்தி, வெள்ளைச் சோலி அணந்திருந்தாள் அவள். அவை, அலையாகப் படிந்து வளர்ந்திருந்த கூந்தலை முடிச்சிட்டி ருந்தாள் பவானி.

நீண்ட அவள் கண் இமைகள் இரண்டும் மை திட்ட ப் பட்டவை போலக் கருமையுடன் விளங்கின. அவள் வேண்டுமென்று கண்களைச் சுழற்றுவது இல்லை. ஆனால், மனத்திலே குமிழியிடும் துயரம் அவள் கண் களில் தேங்கி அவைகளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி அங்கும் இங்கும் சுழல வைத்தன.

"யாருடன் பேசினால் என்ன தவறு நேர்ந்து விடுமோ? யாரைப் பார்த்தால், ஏதாவது களங்கம் வந்து விடுமோ என்றெல்லாம் அவள் மனம் தவித்துக் கொண் டிருந்தது. அழகாகப் பிறந்தது அவளுடைய குற்ற மில்லை. அழகை ஒரு பெண்ணுக்கு அள்ளி அளித்த ஆண்டவன் அவள் வாழ்க்கையைச் சூன்யமாக்கி விட் டானே. அவனுடைய குற்றம்தானே அது?

தண் ணிர் கொண்டு வருவதற்குக் குளத்துக்குப் போனால் அறுபது வயசான சேஷாத்ரி ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு அவளிடம் பேச வருகிறார்.