பக்கம்:முத்துச் சிப்பி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

'பையன் நன்றாகப் படிக்கிறானா? வாக போன அப்புறம் உன் அண்ணா இந்தப் பக்கமே வரவில்லையே? கூடப் பிறந்தவர்களே அட்டடித்தான் அம்மா என்று ஏதாவது பேசிக் கொண்டு நிற்பார் குளத்தங் கரையில்.

' என்னோடு பேசாதிர் கள். இதெல்லாம் என்ன அனாவசியமான பேச்சுக்கள்! என்று அவரிட சொல்லி விட வேண்டும் என்று பவானி துடிப்பான். ஆனால் ஊரில் நாலு பெரியவர்களுடைய உதவி தனக்குத் தேவை யாக இருக்கும் என்று எண்ணி ஒரு பரிதாபச் சிரிப்புச்

சிரித்து விட்டு அங்கிருத்து வீட்டுக்கு வந்து விடுவாள்.

தலையைக் குனிந்து கொண்டு அவன் உட் கார்ந் திருந் தாலும் அவளுடைய சிந்தனை பூராவும் 1. லுவின் வருங் காலத்தை எப்படி உருவாக்குவது என்பதில் முனைந் திருந்தது. பவானி இப்படி திடீர் என்று மெளனியாகச் சிந்தனையில் மூழ்கி விடுவதை பார்வதியும் கல்யா னமும் கவனித்திருக்கிறாா கள். ஆனால் மூர்த்தி : ட் டும் தன்னைப் பார்த்துத்தான் அவள் தலை குனிந்து உட் கார்ந்து இருக்கிறாள் என்று விகல்பமாக நினைத்துக் கொண்டு அந்த அதர்மமான கற்பனைக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தான்.

13. அம்பலத்தரசன்

2. குந்த துணையின்றி வாடும் ஒரு அபலையின் வாழ்க் கையிலே, இன்பமும், அமைதியும் பார்ப்பதற்குக் கிட்டாது.

கல்யாணராமனின் வீட்டிலிருந்து கிளம்பி பவானி கொல்லைப் பக்கமாகவே தன் வீட்டுக்குள் சென்றாள். கொல்லையில் அடர்த்தியாகப் படர்ந்திருந்த நித்திய மல்லிகைப் பந்தலிலிருத்து "கம் மென்று மணம் விசியது. மாலைத் தென்றலில் மலர்ந்து பசுமையான இலைகளின்