பக்கம்:முத்துச் சிப்பி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

அந்த அந்தி வேளையிலே, சற்றே திறந்திருந்த கொல்லைக் கதவை நன்றாகத் திறந்துகொண்டு அசட்டுச் சிரிப்புடன் மூர்த்தி உள்ளே வந்து நின்றான்.

பந்தாட்ட நிபுணன் போல் அவன் "ஸ்போர்ட்ஸ்" பனியனும், அதன் கழுத்துப் புறத்தில் சற்றே வெளியில் தெரியும்படியாகச் சுற்றப்பட்டிருந்த கைக்குட்டையும், "பனாமா பாண்ட்'டும் அணிந்து உ தட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டே நின்றான். அவன் தடவி யிருந்த வாசனைத் தைலத்தின் நெடி காத வழிக்கு வீசியது.

யார்? நீங்களா?' என்று அதிர்ச்சியுடன் கேட் டாள் பதறி எழுந்த பவானி.

"ஆமாம். என்னைக் கண்டு நீங்கள் ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்? படித்த பெண்ணாகிய நீங்கள் இப்படிப் பயந்து நடுங்குவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்றான் மூர்த்தி.

14. அன்னையும் ஆண்டவனும்

மல்லிகை மாலையைக் கையில் பிடித்துக் கொண்டு முகம் வெளிறிட அவள் நின்ற காட்சி பழைய சித்திரம் ஒன்றை நினைவூட்டியது அவன் மனத்தில். என் வீட்டுக் குள் உத்தரவில்லாமல் ஏன் வந்தாய்? வெளியே போய் விடு' என்று சொல்ல வேண்டும் போல் பவானி திணறி னாள். ஆனால், கலவரத்தால் வார்த்தைகள் தொண் டைக்குள்ளேயே புதைந்து போயின. கலவரமும் குழப் பமும் போட்டியிட அவள் பேசாமல் தரையைப் பார்த் துக் கொண்டு நின்றாள்.

அவள் வெகுண்டு எழாமல் மெளனியாக நின்றது

மூர்த்திக்கு அதிகமான துணிச்சலை ஏற்படுத்தியது. அவன் நிதானமாக பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு