பக்கம்:முத்துச் சிப்பி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I

_lங்கள் மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை. பட்டேன். பாலுவை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க பவண்டும். அவ்வளவுதானே? அதையெல்லாம் நான் பாததுக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன உதவி பதவையானாலும் என னிடம் கேளுங்கள் செய்வதற்குச் சித்தமாக இருக்கிறேன்' என்று நாடக பாணியில் தலையைத் தாழ்த்தித் தன் பணிவைத் தெரிவித்துக்

கொண் டான்.

பவானிக்குச் சற்றுத் தைரியம் வந்தது.

'சே! சே! அதெல்லாம் வேண்டாம். உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்?' ' என்றாள் பவானி, தன் கையில் இருந்த மாலையைப் பார்த்துக் கொண்டே.

மாலையிலிருந்த அரும்புகள் யாவும் மலர்ந்து 'கம்’ மென்று மணம் வீசிக் கொண்டிருந்தது. இவன் வராமல் இருந்தால் இத்தனை நேரம் அதைப் படத்துக்குப் போட் டிருப்பாள் அவள். சட்டென்று அவள் மனசில் ஒர் எண்ணம் தோன்றியது. கோவிலுக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே கிளம்பி விட்டால் ஒரு வேளை போய் விடக் கூடும் என்று தோன்றவே, அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தட்டில் வெற்றிலைப் பாக்குப் பழம், கற்பூரத்தை எடுத்து வைத்தாள்.

பெஞ்சியில் உட்கார்ந்திருக்கும் தன்னை அவள் லட்சியம் பண்ணின மாதிரியாகவே காட்டிக் கொள்ள வில்லையே என்று மூர்த்தி மனத்துள் குமைந்தான். அவ ளோடு மறுபடியும் பேச்சை எப்படி தொடங்குவது என்று புரியாமல் திகைத்தான்.

அதற்குள் பவானி மாலையை நடராஜப் பெரு மானுக்குச் சாத்திவிட்டுக் கையில் தட்டுடன் கொல்லைப் பக்கம் போகத் திரும்பினாள். மூர்த்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.