பக்கம்:முத்துச் சிப்பி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

எங்கே கோவிலுக்கா? என்று அவளைத் தடுத்துப்

ஆமாம்; இன்று கிருத்திகை போய்விட்டு வருவது வழக்கம்’ ’ -

முன்னை விட அவள் வார்த்தைகள் சற்று உஷன மாகவே வெளி வந்தன.

இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? ' என்று கேலியாகக் கேட்டான் மூர்த்தி.

  • எதில்? --பவானி திகைத் துப் போய்க் கேட்டாள்.
  • " கோவிலுக் குப் போகிறதில், அங்கே அவர்கள் இது தான் கடவுள் என்று சொல்லிக் காட்டும் உருவத்தை வணங்குவதில்.

பவானி, கூடத்தில் இருந்த நடராஜனின் உருவத்தை ஏறிட்டுப் பார்த் தாள். என்றும் எப்பொழுதும் நிலவும் அந்தப் புன்னகையைக் கவனித்தாள், பிறகு அழுத்தமாக * உங்களுக்குப் பெற்றோர் இருக்கிறார்களா? என்று கேட்டாள்.

ஏன்? அப்பா போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது. அம்மா சமீபத்தில் நாலைந்து வருவுங்களுக்கு முன்பு தான் காலமாகி விட்டாள் என்றான் மூர்த்தி.

  • அப்படியா? அந்த அம்மாள் தான் உங்கள் தாயார் என்று எப்படி நிச்சயமாகச் சொல்வீர்கள்?

மூர்த்தியின் முகம் வெளிறியது. * என்ன? நீங்கள் என்ன சம்பந்தமில்லாமல் பேசு கிறீர்கள்?' என்றான்.

பவானிக்கு கோபம் வந்தது. * சம்பந்தத்துடன் தான் பேசுகிறேன். பிறந்த தினத் திலிருந்து பார்த்து வந்தாலும், தாயின் அன்பனைப்