பக்கம்:முத்துச் சிப்பி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

"உனக்கு இங்கே என்ன வேலை என்கிற அர்த்தம் அதில் புதைந்து கிடந்தது. பார் வதி சமையலறைக்குள் சென்று தான் கொண்டு வந்தவைகளை வைத்து விட்டுத் திரும்பி யதும் மூர்த்தி சமாளித்துக் கொண்டு, நான் பாலு வைத் தேடிக் கொண்டு வந்தேன் மாமி. நான் உள்ளே வரும் போது பவானி கொல்லைப் பக்கமாகவே கோவிலுக்கு ப் போவதைப் பார்த்தேன்' என்றான்.

'கோவிலுக்குப் போனாளா? என்னைக் கூப்பி டா மல் போக மாட்டாளே? என்று ஒரு கணம் தயங்கியபடி யோசித்தாள் பார்வதி. பிறகு என்னவோ நினைத்துக் கொண்டவளாக அவனைப் பார்த்து, "சரி. நானும் இப்படியே கோவிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டுக் கோவிலுக்குச் சென்றாள்.

மூர்த்தி சிந்தனை நிறைந்த மனத்துடன் வீட்டை அடைந் தான். அவன் மனத்திலே பல போராட்டங்கள் நடந்தன. கோவிலுக்குச் சென்ற பவானி பார்வதி மாமி யிடம் தன்னைப் பற்றி ஏதாவது சொல்வி விடுவாளோ என்று அஞ்சினான். அதைத் தெரிந்து கொண்டு மாமா, ‘ஏண்டா! அந்த வீட்டுக் குள் உனக்கு என்னடா வேலை? மறுபடியும் உன் புத்தியைக் காண்பிக்க ஆரம்பித் து விட் டாயே' என்று ஏதாவது சொல்லிவிட்டால் என்ன பண் ணு வது என்று மனத்துக்குள் வேதனை ப் பட் டான்.

ஆனால் பெருந் தன்மையும், நிதான புத்தியுமுடைய பவானி கோவிலுக்குச் சென்றவுடன் முதலில் விநாயகப் பெருமானுடைய சன்னிதிக் குச் சென்று அவனைத் தோத்திரம் செய்து வணங்கினாள். அன்று கிருத் திகை யாக லால் மூலஸ்தானத்தில் அதிகக் கூட்ட ம். அங்கே நின்று உலகெலாமுனர்ந்து ஒதற்கரிய பரம்பொருளை

மன முருகித் துதித் தாள்.