பக்கம்:முத்துச் சிப்பி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

வீட்டிலே அரை மணிக்கு முன்னால் நடந்த சம்பவங் களை அவள் அநேகமாக மறந்துவிட்டாள். அவள் உள்ளத்தெளிவுடன் முருகனின் சமூகத்தை அடைந்த வுடன், பவானி! என்னைக் கூப்பிடாமல் கோவிலுக்கு வந்துவிட்டாயே! உன்னை வீட்டில் போய்த் தேடிய பிறகுதான் நீ இங்கு வந்திருப்பது தெரிந்தது. மூர்த்தி சொன்னான்' என்றாள் பார்வதி.

ஒரு கணம் பவானிக்கு மூர்த்தியின் பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன. அரையிலே பச்சைப்பட்டு தரித்து நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து, கையிலே தாங்கியிருக்கும் சக்தி வேலுடன் கந்தவேல் நிற்கும் கண் கொள்ளாக் காட்சியை அவன் பார்க்காத தனால் தான் கோவிலிலே என்ன இருக்கிறது?’ என்று கேட்டான். கோவிலில் இல்லாத அழகு, இன்பம், வேறு எங்கே இருக்கிறது?

ஹ7ம்...... பாவம்! சிறு பிள்ளை! கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்ததனால், இப்படிக் கண்டபடி பேசிக் கொண்டு அசட்டுத்தனமாக நடக்கிறார் பாவம்! என்று மனத்துக்குள் அனுதாபப்பட்டாள் பவானி. மூர்த்தி யைப் போலத் தான் பாலுவை வளர்க்கக் கூடாது. கொஞ்சம் கண்டிப்பும், மிரட்டலும் அவசியம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.

சன்னிதியில் தீபாராதனை நடந்தது. விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு பவானியும் பார்வதியும் வெளியே பிராகாரத்தை அடைந்தார்கள்.

யார் முதலிலே பேசுவது, எதைப் பற்றிப் பேசுவது என்று தோன்றாமல் இருவரும் மெளனமாகவே பிரதட் சினம் செய்தார்கள் மூர்த்தி உன் வீட்டுக்கு வந்திருந் தானா? அவன் ஒரு மாதிரிப் பையன்' என்று சொல்விப் பவானியை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் பார்வ