பக்கம்:முத்துச் சிப்பி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

செய்துவிட்டு வருவது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

பவானியும் பார்வதியும் வீடு திரும்பும் போது இரவு w முரை மணி இருக்கும். கல்யாணரா மன் பவானியின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பாலுவுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தார். அவர்கள் வீட்டை அடைவதற்கு முன்பே மூர்த்தி வேறொரு சந்தில் புகுந்து, அங்கே வந்து பாலுவுக்கு அருகில் உட்கார்ந்து கொண் டான். பள்ளிக்கூடம் விடுமுறை ஆதலால், கல்யாணம் சில கதைகளைப் பாலுவுக்குச் சொல்லிக் கொண்டிருந் Аф ггп .

காந்தி மகாத்மா சிறு பையனாக இருந்தபோே தான் மாமிசம் சாப்பிட்டால் உடம்பு வலுவாகி, வெள்ளைக் காரர்களை இந்த நாட்டை விட்டு விரட்டி விடலாம் என்று நினைத்து ரகசியமாகத் தன் நண்ப னுடன் மாமிசம் சாப்பிட்டார். ஆனால் அப்பா அம்மா வுக்குத் தெரியாமல் அவர் இப்படிச் செய்வது அவருக்கே பிடிக்கவில்லை. எத்தனையோ இரவுகள் இதைப்பற்றி நினைத்துக் கொண்டு துங்கவே மாட்டாராம்' என்றார் கல்யாணம்.

'அப்படியானால் கெட்ட காரியங்களையும், மனசுக்குப் பிடிக்காதவைகளையும் செய்தால் துரக்கம் வராதா மாமா?' ' என்று கேட்டான் பாலு.

"ஆமாம் பாலு! திருடன் நிம்மதியாகத் துரங்க மாட் டான். அப்படித் தூங்கினாலும், அ ைனை ப் போலீஸார் பிடித்துக் கொண்டு போவதாகவும், சிறை யில் கல் உடைப்பதாகவுமே அவன் கனவு கண்டு கொண் டிருப்பான். அவனவன் செய்கைகளைப் பொறுத்தே இருக்கிறது உள்ளத்துக்குக் கிடைக்கும் ஆறுதல்' என் கல்யாணம்.