பக்கம்:முத்துச் சிப்பி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 9

"கதை கேட்டு அலுத்து விட்டது மாமா. வேறே ஏதாவது விளையாட்டுச் சொல்லிக் கொடுங்கள் என்று அவன் கல்யாணராமைைனப் பார்த்துக் கேட்டவுடன், மூர்த்தி அவனைப் பார்த்து 'உனக்கு என்ன விளை

யாட்டு தெரியும் சொல். நானும் நீயும் விளையாட

லாம்' என்று கேட்டான்.

பாலுவுக்கு உற்சாகம பொங்கி வந்தது.

ஒரு வாரமாக சேஷாத்திரி வீட்டில் கேரம் ஆடிப்

==

பழகி இருக்கிறேன். அந்த ஆட்டம் நன்றாக இருக்கிறது விளையாடலாமா? என்றான்.

பார்வதியும் அடுப்பங்கரை வேலைகளை முடித்துக் கொண்டு தெருத் திண்ணையில் வந்து உட்கார்ந்தாள். பாலு சொல்லியதைக் கேட்டவுடன் அவள், "ஆமாம் மூர்த்தி! கேரம் பலகை மச்சில் தூசு படிந்து கொண்டு கிடக்கிறது. நாளைக்கு அதை எடுத்து பாலுவுக்குக் கொடு' என்று கூறினாள்.

பாலுவுக்கு அப்பொழுதே அந்தப் பலகையை எடுத்து வைத்துக் கொண்டு விளையாடவேண்டும் என்று

ஆசையாக இருந்தது. அன்று இரவு முழுவதும் அவனுக்குச் சரியான தூக்கமே இல்லை.

16. டவுன் பஸ்

அடுத்த நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் பவானிக்குப் பாலுவை அழைத்துப் போய் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு வரவேண்டும் என்கிற விஷயம் நினைவுக்கு வந்தது. ஆனால் பாலு படுக்கையை விட்டு எழும்போதே கேரம் பலகையைப் பற்றி நினைத்துக் கொண்டே எழுந்தான் அம்மான் குத் தெரியாமல் மூர்த்தி மாாவைப் பார் த்து அந்தப் பலகையை வாங்கி வந்து விட வேண்டும் என்று நினைத்