பக்கம்:முத்துச் சிப்பி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

அதற்கு மேல் மூர்த்திக்கு அங்கே இருப்புக் கொள்ள வில்லை. அவசரமாகப் பல் தேய்த்து விட்டு உள்ளே சென்று காப்பி அருந்தினான். முதல் வேலையாகப் பானில் கிடந்த "கேரம் பலகையை எடுத்துக் கீழே வைத்து விட்டுச் சமையலறைக்குள் சென்று பார்வதி

யிடம்,

மாமி! இன்றைக்கு நான் டவுன் வரைக்கும் டோக வேண்டிய வேலை இருக்கிறது. சாப்பாட்டுக்கு வழி மாட் டேன். எனக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டாம்' என்றான். அதைக் கேட்ட பார் வதி, "ஏன்டா அப்ப ! திருச்சி வரைக்கும். * காம்ப் போகவேண்டியிருக்கும் என்று நேற்று ராத்திரி சொன்னாயே?’ என்று கேட்டாள்.

நாளைக்குப் போகலாம் என்று இருக்கிறேன் மாமி' என்று சுருக்கமாகக் கூறிவிட்டு, அவன் குளித்து உடை அணிந்து கொண்டு கிளம்பும்போது Վ: IT aյի նլ: ஒன்பது மணி ஆகிவிட்டது.

التي

பவானியும் பாலுவும் சாப்பிட்டு விட்டுக் கதவைப்

ச்ே பூட்டிக் கொண்டு கல்யாணராமன் வீட்டுக்குள் வந்தார் கள். அப்பொழுது தான் ஸ்நானம் செய்து விட்டுப்

பூஜையில் ஈடுபட்டிருந்த கல்யாணம் ' என்னம்மா, வெயில் ஏறி விட்டதே! காலையில் சீக்கிரமே கிளம்பி இருக்க வேண்டும்' என்றார்.

பிறகு பள்ளிக்கூடத்தில் சீக்கிரமே வேலைகளை முடித்துக் கொண்டு வந்து விடும்படியாகக் கூறினார். இருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள்.

பசுமலை பஸ் ஸ்டாண்ட் குளத்தங்கரையின் சமீபத் தில் இருந்தது. குளத்தைச் சுற்றிப் பெரிதும் சிறிதுமாக வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் கல் பெஞ்சுகள் போட்