பக்கம்:முத்துச் சிப்பி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பாலு மூவரும் ஒரு பக்கத்தில் உட்கார வேண்டியிருந் தது. பாலுவுக்கு ஒரு பக்கத்தில் பவானி உட்கார்ந் தாள். இன்னொரு பக்கத்தில் மூர்த்தி உட்கார்ந்தான். பவானிக்கு இவையெல்லாம் சற்றும் எதிர்பாராத அF II Ll i : தி Tெ .

== ா - r H - *- 獸 * == __ 畢 * - மூர்த்தி தடவியிருந்த மருக்கொழுந்து "செண்ட் டின் மணம் "கம் மென்று நாசியைத் துளைத்தது. பவானி கழுத்து வலியெடுக்கிற மாதிரி ஜன்னல் பக்கமே பார்த் துக் கொண்டிருந்தாள். ŁJ To மட்டும் தொணதொண

வென்று ஏதோ மூர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

பஸ் அடுத்த கிராமத்தின் "ஸ்டாண்டில் வந்து நின்றது. அங்கேயும் சிற்றுண்டிக் கடைகளும், இளநீர்க் கடைகளும் இருந்தன. அந்த இளநீர்க் கடைக்காரன் கொஞ்சம் வியாபார தந்திரம் தெரிந்தவன் . நல்ல வெயிலுக்கு இளநீரில் ஐஸைப் போட்டுக் கொடுத்தான் எல்லோரும் விரு ம்பிச் சாப்பிட்டார்கள். மூர்த்தி பாலுவுக்கு ஒரு டம்ளர் வாங்கிக் கொடுத்துத் தானு . அருந்தினான்.

உங்க தங்கச்சிக்கும் வாங்கித் தாங்க சார்!’ என்றான் கடைக்காரன் மூர்த்தியிடம் பவானியைட

பார்த்து.

"நோ நோ! தங்கச்சியா?’ என்று அசடு வழியச் சொல்லிவிட்டு, 'நீங்கள் சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டான் பவானியிடம்.

பவானி, "வேண்டாம் என்கிற பாவனையாகத் தலையை அசைத்தாள்.

வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ பவானியைக் கவனித்தாள்.

'ஏனம்மா! அவர் உன் அண்ணா தானே? என்று கேட்டாள்.