பக்கம்:முத்துச் சிப்பி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

பவானிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரிய வில்லை. "ஆமாம்” என்று சொல்லி வைப்பதில் என்ன கவய என்று நினைத்தாள். ஆகவே அவள், ஆமாம்

அம்மா . அவர் என் அண்ணன் தான் என்றாள் அவளிடம்.

' அதுதானே பார்த்தேன். பின்னே ஏனம்மா பிள நீர் சாப்பிடலே நீ என்று கேட்டாள் அந்தப் .ெ கண்.

' வரும்போதுதான் சாப்பிட்டு வந்தேன்

என்று கருக்கமாகவே பதிலளித்தாள் பவானி.

வயது வந்த ஒரு வாலிபனும் பெண்ணும் பழகு வைத ம வகம் எப்படியெல்லாம் வேவு பார்க்கிறது? அவன் உன் அண்ணனா, மாமனா, தம்பியா என்று கேட்டுச் சாதானம் அடைகிறது. அண்ணன், தம்பி என்று சொல்லி விட்டால் திருப்தியுடன் தலையை ஆட்டி அத்தச் சகோதர அன்பை ஆமோதிக்கிறது. மாமன் அந்தை மகன் என்று சொல்லி விட்டால் உன் புருஷன் எங்கே? ஒகோ, வேறு ஊரில் இருக்கிறாரோ? ஏதோ அலுவலாக இவர்களுடன் போகிறாயோ என்றெல்லாம் திருப்தியடையப் பார்க்கிறது. யாரோ அன்னியனுடன் ஒரு பெண் பழகுகிறாள் என்றால் அதைப்பற்றி இல்லா ததும் பொல்லாதததும் புனைந்து பேசவோ தயங்குவ தில்லை.

பஸ் கிளம்புவதற்கு அறிகுறியாக டிக்கெட் கொடுப் வர் பஸ்ஸுக்குள் ஏறிச் சில்லறை கேட்க ஆரம் பித்தார். வெளியே நின்றிருந்த மூர்த்தி உள்ளே வந்து உட் கார்ந்தான். பஸ் டவுனை அடையும் வரை அவன் எவ்வளவோ முயன்றும் பவானி அவனுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை.

மு.சி-6