பக்கம்:முத்துச் சிப்பி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

மரத்தடியில் வாயில் சிகரெட்டைப் புகைத்தபடி |ன்றிருந்த மூர்த்தி சிகரெட் துண்டை கீழே எறிந்து காலினால் அழுத்தித் தேய்த் தான். நெற்றியில் முத் து முத்தாக அரும்பி இருந்த வியர்வைத் துளிகளைக் கைக் குட்டையால் துடைத்துக் கொண்டே பவானியும், பாலு வும் செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டு நின்றான்

அவன் .

அவனிடம் இதுவரையில் யாரும் இவ்வளவு அலட்சிய மாக நடந்து கொண்டதில்லை. பம்பாயிலே பல வரு வுங்கள் இருந்திருக்கிறான். பல குடும்பங்களுடன் பழகி இருக்கிறான். அங்கே யெல்லாம் பல தரப்பட்ட பெண் களுடன் அவனுக்குப் பழக்கம் உண்டு. ஊரிலே நல்ல சினிமாவாக வந்தால் அவன் தனக்குத் தெரிந்த குடும்பப் பெண்களை அழைத்துப் போகத் தவற மாட்டான். முதல் வகுப்பு டிக்க - வாங்கி சினிமா பார்த்த பிறகு டாக்சியில் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவான். சிரிப்பும் வேடிக்கையுமாக அவர்களுடன் பொழுது போக் குவது ஒரு நாகரிகம் என்று அவன் கருதினானோ என்னவோ !

மூர்த்திக்கு மங்களதாஸ் என் கிற குஜராத்தி வியா பாரியின் மகள் தமயந்தி நினைவுக்கு வந்தாள். செக்கச் செவேல் என்று செவ் வாழைத் தண்டு மாதிரி வாளிப் பான கைகளும் , உருண்டை முகமும் உடைய அவளோடு எத்தனை இடங்களுக்குப் போயிருக்கிறான்? மரீன' கடற் கரையிலே அந்த நீண்ட பாலத்தில் அவனும் அவ ளும் எத்தனை பெளர்ணமி இரவுகள் கை கோத்து உலாவி இருக்கிறார்கள்!

பெண்களை விளையாட்டுப் பொம்மைகளாகவும் அலங்காரப் பொருள்களாகவும் தன் உல்லாச வாழ்க்

கைக்கு ஒரு கருவியாகவும் நினைத்து இறுமாந்திருந்த