பக்கம்:முத்துச் சிப்பி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 8

மூர்த்தியின் மனம், பவானியின் உதாசீனத்தை நினைத் துப் பொருமியது .

ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுவிட்டு மூர்த்தி மறு படியும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். அங்கிருந்து பஸ் ஒன்று புறப்பட்டுக் கொண்டிருந்தது. அடுத்த ஊர் வரையில் அவன் ஒர் அலுவலாகச் செல்ல வேண்டியிருந் ததால் பஸ் ஸில் ஏறி உட் கார்ந்தான். "பஸ் முனிசிபல் கட்டிடத்தின் மணிக் கூண்டைச் சுற்றிக் கொண்டு, முனி சிபல் ஹைஸ்கூலுக்கு வந்து சேர்ந்தது. பள்ளிக்கூடத் தின் தாழ்வாரத்தில் போட்டிருந்த பெஞ்சில் பவானியும் பாலுவும் உட்கார்ந்திருந்தனர். மூர்த்தி ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே கூடியிருந்த பல பேரை விட்டு அவன் பார்வை பவானியின் மேல் சென் றது . அடக்கமே உருவாக அமர்ந்திருந்த அவளது கவர்ச்சிகரமான தோற்றம், அவன் மனத்தில் பல எண் ணங்களை எழுப்பிவிட்டது.

. அந்த உருண்டை மூஞ்சி தமயந்தியும், பள்ளக் கண் களையுடைய ரோகிணியும் இந்தப் பவானியின் முன்பு எம்மாத்திரம்? என்று மூர்த்தி நினைத்தான்.

இவள் விதவையானால்தான் என்ன? விதவைக்கு வாழ்வே இல்லையா? அவர்கள் மறுமணம் செய்து கொண்டு வாழத்தான் சட்டமும், சமூகமும் இடங் கொடுக்கிறதே! ஆனால் பவானியின் உள்ளத்திலே என்ன இருக்கிறது? மென்மையான உடலையும் கவர்ச்சி கரமான தோற்றத்தையும் உடைய அவள் உள்ளம் கற் பாறையைவிடக் கடினம் வாய்ந்தது. அங்கே கருணைக் கும், அன்புக்கும் தான் இடம் உண்டு. ஆனால் சுய கெளரவத்துக்கு இழுக்கோ அவமானமோ ஏற்பட அந்த மனம் இடங் கொடுக்காது என்பதை மூர்த்தி அறிய வில்லை.