பக்கம்:முத்துச் சிப்பி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

சற்றும் எதிர்பாராத விதமாகப் பவானி, பள்ளிக் கூடத்துக்கு வெளியே நின்றிருந்த பஸ்ஸை ப் பார்த்தாள். தற்செயலாக அவள் பார்வை மூர்த்தியின் மேல் சென் யது. சோகமும் கருணையும் ததும்பும் அவள் கண்கள் ஒரு வினாடி நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்தன. அலட்சியமும் வெறுப்பும் நிறைந்த பார்வை ஒன்றை அவன் மீது வீசிவிட்டுப் பவானி முகத்தை வேறு புறம் இருப்பிக் கொண்டாள்.

மூர்த்தி புன்முறுவல் பூத்தான். அவளுடைய அலட் வியத்தையும் வெறுப்பையும் பார்த்துத் தனக்குள் நகைத் துக் கொண்டான்.

கண்டக்டர் விசில் கொடுக்கவும் பஸ் இடத்தை விட்டு நகர்ந்தது.

18. சீர்திருத்தவாதி... ...!

கேரம் பலகையை வெளியே எடுத்து வைத்துவிட்டு மூர்த்தி வெளியூர் போனது பாலுவுக்குப் பிடிக்கவில்லை. "இன்னும் பத்து நாட்களில் பள்ளிக்கூடம் திறந்து விடு வார்கள். பிறகு பள்ளிக்கூடம் போகவும் பாடங்களைப் படிக்கவுமே பொழுது சரியாகிவிடும். மூர்த்தியுடன் விளையாடலாம் என்று நினைத்திருந்தான் பாலு . அவ னும் ஊரில் இல்லாமல் போகவே அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை.

உள்ளே பவானி ரவா தோசை வார்த்துக் கொண்டி ருந்தாள். கமகம வென்று வாசனை வீசியது. மாலை சுமார் மூன்று மணி இருக்கலாம். பாலு கால்களைச் சப்பணம் கட்டிக்கொண்டு, வெறிச்சோடிக் கிடந்த தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான். கல்யாணமும் பார்வதியும், யாரோ உறவினர் வீட்டுக் கல்யாணத்திற் காகப் போயிருந்தனர். அவர்கள் போய் நான்கு தினங்