பக்கம்:முத்துச் சிப்பி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.3

மூர்த்தியின் தட்டில் தோசையை வைத்து விட்டு அவரை உட்காரும்படி கூறினாள்.

'ஒன்றுமில்லை. உன் பிள்ளையைப் பத்து நாட்க ளாக அந்தப் பக்கம் காணோம். உடம்பு ஏதாவது சரி யில்லையோ என்று பார்த்துப் போக வந்தேன். ஹைஸ் கூலில் தானே சேர்க்கப் போகிறாய்? என்று கேட்டார் சேஷாத்ரி.

'உடம்பு ஒன்று மில்லையே! நான்தான் வெயிலில் அலைய வேண்டாம் என்று சொன்னேன். ஹைஸ்கூலில் தான் சேர்க்க வேண்டும்’ ’ என்றாள் பவானி.

சேஷாத்திரி மூர்த்தியைக் கவனித்தார்.

'ஏண்டா! நீ கல்யாணத்தின் மருமகன்தானே? உனக்கு கல்யாணம் ஆயிற்றோ?' என்று விசாரித்தார்.

'இல்லை சார்' என்றான் முர்த்தி.

"என்ன டா இல்லை? என் பெரிய பிள்ளை ராமுவின் ஈடுடா நீ. அவனுக்கு நாலு குழந்தைகள் இருக்கிறார் கள். நீ பிரம்மச்சாரியாய் ஊரைச் சுற்றிக் கொண்டு , வரட்டும் அந்தக் கல்யாணம்! "உன் மருமகன் என்னடா பச்சைக் குழந்தையா?" என்று கேட்கிறேன்.

  • கேளுங்கள் சார்’ என்றான் மூர்த்தி கைக்குட்டை யினால் வாயைத் துடைத்துக் கொண்டு.
  • " கேட்கிறேண்டா! கேட்கிறதோடு விட மாட்டேன் என் பேத்தி ஒருத்தி இருக்கிறாள். பத்தாவது படித்திருக் கிறாள். வீட்டு வேலைகளும் செய்யத் தெரியும். அவளை உனக்கு முடிச்சுப் போட்டு விட்டுத்தான் மறு வேலை. ஆமாம்...' என்றார் அவர். பிறகு 'ஜாதகம் கீதகம் இருக்கிறதா இல்லை கிழித் தெறிந்து

விட்டாயா!' என்று கேட்டார்.