பக்கம்:முத்துச் சிப்பி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6

எச்சரிக்க வந்திருக்கிறார் என்பது பவானிக்குப் புரிந்து விட்டது.

சிலையைப் போல அவள் கூடத்தில் மாட்டி இருந்த நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு சென்று உட் கார்ந்து விட்டாள்.

19. தந்தி வந்தது

அடுத்த நாள் பொழுது விடிந்தது. வழக்கம்போல் அப்பொழுது நகர்ந்து அதற்கு அடுத்த நாளும் உதயமா கியது. பார்வதி மட்டும் கல்யாண வீட்டிலிருந்து கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து வந்து பாலு வுக்குக் கொடுத்தாள். கல்யாணம் நடந்த விமரிசை களைப் பற்றிப் பவானியிடம் கூறினாள். எல்லாவற்றை யும் கூறிவிட்டு, ' கல்யாணம் பண்ணிக் கொண்ட பெண்ணும், பிள்ளையும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள். அவர்களின் காதலின் உறுதியை, ஆழத்தை, பண்பைக் கண்டு இரு தரப்பினரும் உடன் பட்டுக் கல்யாணம் நடந்ததாம்' என்று முடித்தாள் பார்வதி.

நேற்றைக்கு முந்திய நாள் சேஷாத்திரியும்.மூர்த்தியும் வாதித்துச் சண்டையிட்ட சீர்திருத்தத்தைப் பற்றிப் பவானி நினைத்துப் பார்த்தாள். சீர்திருத்தம் என் கிற பெயரிலே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி, அந்தப் பெண் களுடன் ஒருவரைப் பற்றி ஒருவருக்குத் தெரியாமல் அழைத்துக் கொண்டு, ஊரில் கண்ட இடங்களில் திரிந்து வரும் ஜோடிகள் செய்வது சீர்திருத்தமா?' என்று பவானி உள்ள ம் குமுறினாள்.

"பவானி! ஏன் என்னவோ போல இருக்கிறாய்?" என்று பார்வதி அவளை அன்புடன் விசாரித்தாள்.