பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கட்டபொம்மன் கதையில் அவனுடைய முன்னோர்கள், திருமலை நாயக்கனிடம் நரபலிகொடுப்பதற்காகச் சிறையிலடைக்கப்பட்டிருந்த சக்கிலியர்களை மீட்க வாதாடினார்கள் என்றும், திருமலை நாயக்கனும் அதற்கிணங்கினான் என்றும் ஒரு செய்தி கூறுப்பட்டுள்ளது. இது மேற்கண்ட கருத்தையும் வலியுறுத்தும் திருமலை நாயக்கன் கட்டிடப் பணிகள் செய்த காலம் 1623 முதல் 1655 வரை. அப்படியானால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் சக்கிலியர் தமிழ் நாட்டில் நாயக்கர் ஆட்சி பலமாக வேரூன்றாத இடங்களுக்குக் குடி பெயர்ந்திருக்க வேண்டும். ஆரிய நாடு நாயக்கர் ஆட்சியின் கீழ் இல்லை. ஆகவே பகடைகள் அல்லது சக்கிலியர்கள் அங்கு குடியேறி வாழ்ந்தார்கள் என்று எண்ணினால் தவறெதுவும் இல்லை. எனவே முடிவாக 260 வருஷங்களுக்கும், 300 வருஷங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இச்சம்பவங்கள் நடந்திருக்கலாம் (கி.பி.1658 - 1738). ஆனால் 260 வருஷங்களுக்கு முன் பாடப்பட்ட குறவஞ்சியில் குறத்தி குறி சொல்லும்போது தெய்வங்களை அழைக்கும் கட்டத்தில், "செப்பரு மலைமேல் தெய்வ கன்னியர்தான், ஆசியங்காவா, அருட் சொரிமுத்தே!" 'ளன. இதனோடு முத்துப்பட்டன் கதையில் வரும்

துட்டரை யடக்குகின்ற சொரிமுத்து ஐயன்வாசல் பட்டன்மேல் வரவு பாட பால முக்கனன் காப்பாமே!" சொரிமுத்து என்பது பாபநாசத்தில் சொரிமுத்தையன் கோவில் குடிகொள்ளும் தெய்வம், குற்றாலக் குறவஞ்சி ஆரிய நாட்டையும், சொரிமுத்து என்ற பெயரையும் குறிக்கிறது. காப்புச் செய்யுளும் சொரி முத்தையன் வாசல் பட்டன் என்று கூறுகிறது. வாசல் என்பது வாசலில் காவலுக்கு நிறுத்திய தெய்வம். அது இன்றும் கோவிலுக்கு வடக்கேயுள்ள பட்டவராயன் கோவிலில் இருக்கிறது. அங்கே ஒரு ஆண் உருவச் சிலையின் பக்கத்தில் இரண்டு பெண் சிலைகளும் உள்ளன. பட்டவராயன் சிலை முத்துப்பட்டனையும், பெண்ணுருவச் சிலைகள் மனைவியர் பொம்மக்காவையும் திம்மக்காவையும் குறிப்பனவாகும்.