பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமையால்  வாழ்க்கை இயக்கப்படுகிறதென்ற நம்பிக்கையால் எழுந்த கதையே இக்கொள்கைகள் நிலப்பிரபுக்கள் தங்கள் உயர்வுக்கும், உழவர் தாழ்வுக்கும் விதியையும், தெய்வ சித்தத்தையும் காட்டி ஏமாற்றுவதையே குறிப்பிடம்.

   இயற்கைக்கு அதீதமான, தெய்வீகச் செயல் எதுவும் பட்டன்

கதையில் இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூகச் சூழ்நிலையில் செயல்பட்ட சக்திகளைக் காட்டுவதில் பட்டன் கதை நாமரறிந்த சரித்திர உண்மைகளினின்றும் மாறுபடவில்லை. ஆரியநாடு இருந்தது.பகடைகள் அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்திருக்க முடியும். சமூக வேறுபாடுகளைப் பாதுகாக்க, உழைப்பவரைக் கீழ்ப்படியில் மிதித்துவைக்க, சக்திகளையும், கொலைகளையும், நில உடைமையாளர்கள் நிகழ்த்தியதும் உண்மையே வேறெரு வில்லுப்பாட்டு,"சின்னத் தம்பி கதையும்" இதற்குச் சான்று சின்னத்தம்பி, தனது வேட்டைத் திறமையால் பயிரை அழிக்கும் விலங்குகளைக் கொன்று புகழ் பெற்று, பல இளைஞர்களுக்குத் தலைவனாக சமூக அந்தஸ்தில் உயர்ந்துவிட்டான்; சக்கிலியனுக்கு அந்த அந்தஸ்து கூடாது. என்றெண்ணி நிலப்பிரபுக்கள் அவனைச் சதி செய்து கொன்றுவிட்ட கதைதான் இது.

   இக்கதையில் வரும் பாத்திரங்கள் 

கற்பனா பாத்திரங்களாக இல்லை. உண்மையில் வாழ்ந்தவர்களாகக் கதை பாத்திரங்களின் அமைப்பில் தோன்றுகிறது. சமூக உண்மை கதை முழுவதும் ஊடுருவி நிற்கிறது. முத்துப்பட்டன் பொய்மையை எதிர்த்தவன். சாதியைச் துறந்தவன். அதுமட்டுமல்ல தான் சேர்ந்துவிட்ட குலத்துக்காக உயிர் விட்டவன். தன்னால் பெண் கொடுத்த குலத்துக்கு அழிவு வராமல் பாதுகாக்க தன் உயிர் கொடுத்தவன் அவனைக் காமப்பித்தன் என்று வருணிக்கச் சிலர் முயலுகிறார்கள். அவன் அண்ணன்மாரிடம் வாதாடுவதையும் செருப்புத் தைத்து விற்று, பகடைகளது சமூக வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டதையும் மறைக்க அவர்கள் முயலுகிறார்கள். ஆனால் வில்லுப்பாட்டுப் பாடப்படும் உருவில் இவை மெத்தையும் மறைக்க முடியாது.

   மேலும் தற்காலத்தில் சொரி முத்தையன் கோவிலில் நடக்கும் தீக்குளிப்பு வைபவமும் இக்கதையின் நிகழ்ச்சிகள் உண்மையென்பதை