பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அடையாள பூர்வமாகக் காட்டுகின்றன. இந்த வைபவத்தின் போது பட்டவராயன் கோவில் முன்பு ஒரு வண்டி விறகை எரிப்பார்கள் கோமரத்தாடிகள் தெய்வ ஆவேசம் கொண்டு ஆடுபவர்கள் தணலில் இறங்கி மறுபுறம் செல்வார்கள். அவர்கள் தீயில் இறங்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் பாசிக் கொத்து வாங்கி அணிந்து கொண்டு செல்வார்கள். இந்த வழக்கம் எதற்கு அடையாளமாகக் காணப்படுகிறது? பாசிக் கொத்து சக்கிலியர்களின் தாலி, இதை அணிந்து செல்லும் அம்மன் கொண்டாடிகள் பொம்மக்கா, திம்மக்கா ஆகிய இருவரையும் உருவகப்படுத்துகிறார்கள். தியிலிறங்குவது உடன்கட்டையேறியதைக் குறிப்பிடுகிறது. சிங்கம்பட்டி ஜமீன்தார் பாசிக்கொத்து அளிப்பது, அவருடைய முன்னோர் ஒருவர் உடன்கட்டையேற அனுமதியளித்ததைக் குறிக்கும். பட்டவராயன் கோயில் பொதிகைமலை மேல் தற்போது காரையாறு அணைகட்டியுள்ள இடத்திலிருந்து ஒன்றரை மைல் துரத்தில் பட்டவராயன் கோவில் இருக்கிறது. இது சொரி முத்தையன் கோவிலுக்கு வடக்கே உள்ளது. இக்கோவிலுள் மூன்று சிலைகள் உள்ளன. ஒன்று பட்டவராயன் சிலை; இடுப்பில் சல்லடம், ஒரு கையில் வல்லயம், மற்றொன்றில் சூர்க்கத்தி, தலையில் முண்டாக, முறுக்கி விட்ட மீசை, சாய்ந்து விழுவது போன்ற நிலை. மொத்தத்தில் கலைத்திறன் மிக்க சிற்பி தன் ஆர்வமுழுவதையும் கொட்டிச் செதுக்கியுள்ளது போலத் தோற்றமளிக்கிறது. ஒரு பக்கத்தில் திம்மக்கா இடுப்பில் ஒரு கூடை, ஒரு கை கூடையை னத்திருக்கிறது. இச்சிலை பட்டவராயன் சிலைக்கு மற்றொரு பெண்ணுருவச் இச்சிலையைவிட சற்றே உயரமானது மறுபுற 8 ; } રુ 醬

ம்மக்கா. அவள் கையில் ஒரு கலசம், மற்றொரு 諡 క్ష్ வன்னியரை எதிர்த்துச் சண்டை செய்யும்போது பட்டன் سم உபயோகித்ததாகச் செ > சார்த்தி வைக்கப்பட்டுள்ன. அவை போன்ற பல ஈட்டிகளும் வல்லயங்களும், நேர்த்திக் கடனாக மக்கள் அளித்திருக்கிறார்கள்.