பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 இதற்கு மேல் சில செய்திகளை 100 வயது நிறைந்த சிங்கம்பட்டி சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் கூறினார்கள். வால்ப்பகடையும் அவனது உறவினர்களான சக்கிலியர்களும் நீலகண்டன் என்ற தொட்டியானது மேற்பார்வையின் கீழ் மலைக் காவல் புரிந்து வந்தார்களென்றும், அவர்களே மலையிலுள்ள மாட்டுக்கிடைகளைக் காவல் காத்து வந்தார்களென்றும் சிங்கம்பட்டியில் வசித்துவந்த சுப்பிரமணியக் கவிராயரவர்கள் என்னிடம் கூறினார்கள். மேலும் இந்த நீலகண்டனையும், அவனைச் சேர்ந்தவர்களையும், கொன்று விட்டுத்தான் நல்ல குட்டி என்பவன் சிங்கம்பட்டிப் பாளையத்தை நிறுவினான் என்றும் கூறுகிறார்கள். நீலகண்டன் கொல்லப்பட்டான் என்பதற்கு "நீலகண்டன் கசம்", நீலகண்டன் "தலை வெட்டிப்பாறை" என்ற பெயர்கள் சான்றாகக் காணப்படுகின்றன. இதே நீலகண்டன்தான் வில்லுப்பாட்டிலும், - "காக்க வேணும் பொதிகாசல் மென்று கட்டுடனே வாரா ! வந்து திருநீல கண்டனைக் க எடு கடவிளை தானும் விட்டு என்று குறிப்பிடப்படுகிறான். பட்டவ சயன் கதை நிகழ்ச்சிகள் நடக்கும் காலத்தில் அவன் வாழ்ந்திருக்கிறாள். அப்படியானால் பட்டவராயன் கொல்லப்பட்ட சில ஆண்டுகளுககுப் பின்னர் நல்ல குட்டி திருநீலகண்டனைக் கொன்று சிங்கம் பட்டியை ஸ்தாபித்திருக்க வேண்டும். சிங்கம்பட்டியை நல்லகுட்டி ஸ்தாபித்தது சுமார் 350 வருஷங்களுக்கு முன்புதான் என்று தெரிகிறது. அப்படியானால் இச்சம்பவங்களும் சற்றேறக்குறைய அதே காலத்தில் நிகழ்த்திருக்கக் கூடும். இனி இக்கதை எவ்வாறெல்லாம் வழங்குகிறது அவற்றுள் சரித்திர நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமானது எது என்று காண்போம். கதை வேறுபாடுகள் முதற் பகுதியில் கூறப்பட்டுள்ள "பெரிய முத்துப்பட்டன் கதை" என்ற அச்சுக் கதைப்பிரதியில் போக்கு எவ்வாறிருக்கிறது என்பதைக்