பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பங்கயத் தேனே மன்மதன் பகழியைத் தானே பாசங் கொண்டேனே உன்மேல் நேசங் கொண்டேனே சங்கீதக் குயிலே வரும் தனிஇன்ப மயிலே தாகங் கொண்டேனே உன்மேல் யோகங் கொண்டேனே பங்கயக் குறிப்போ உன்மனம் பாறையி னிருப்போ பச்சைக்கல் நிறத்தாய் தனத்தையும் கச்சினில் மறைத்தாய் பெண்ணே உனைப்பெற்ற தாய்தகப்பனுரு சொல்லு பேதனை கொள்ளாது சற்றே என்முன்னாக நில்லு. பெண்கள் : பின்னே வழிவிட்டு ஒடனுமானாலுங் கல்லு வேறே பரியாசஞ் சொன்னால் பறிப்போமே பல்லு பட்டன் : இந்தஉறுதியுஞ் சந்தோஷஞ் சொன்னாலுங் கேளேன் இஷ்டமாகக் கூடியிருக்க இது நல்லநாளே பெண்கள் : வந்த சகுனமோ அக்காள் இவனாரு கேளு மடியைப் பிடிக்க வருகிறான் பாவி சண்டாளன், சாம்ப சிவநாதர் போலிருக்கிறீர் சுவாமி சக்கிலிச்சி நாங்கள் தீண்டப் பொறுக்குமோ பூமி பட்டன் : ஆண்டவன் செயலினாலுந்தனைப் பெற்றாளே மாமி அல்லாமல் வேறில்லை தாகந் தணிந்திட நேமி சொந்தமாகவே வந்தேன் மையலைத் திரு. பெண்கள் : சுவாமி பொதிகாசல முண்டு கார்ப்பார் விந்தையாய் பேசுறானே எங்களைக் காரு வெட்டிரு வானென் தகப்பன் இதோ உன்னைப்பாரு பட்டன் : நாக்கை சுழற்றுது உள்வாய்யுளறுது பெண்ணே நன்மையுண்டு கையால் தண்ணிரு தந்திடு கண்ணே.