பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெண்கள் : கன்றுக்கிரங்கும் பசுபோலலைகிறீர் சுவாமி. இது காரியமல்ல வந்தவழி போம் சொன்னேன், அப்பன் பசியோடே தேடியிருப்பானே யெங்களை, அப்புறம் துரவிலகிடும் போறோம் நாங்களே. பட்டன் : ஒப்புடன் கூடியிருக்கலாஞ் சக்கிலிப் பெண்களே ஒடிப்போனா லெந்தன்தோஷம் விடாதடி உங்களை பெண்கள் : பொழுது உயர்ந்து வெகுநேரமாகுது பொம்மக்கா போகவொட்டாமலே நம்மை மறிக்கிறான் திம்மக்கா மறித்துமே பெண்களை முந்தியே எட்டிப் பிடிக்கிறான் மையல் பொறுக்காமல் மன்மதபாணந் துடிக்கிறான் பெண்களிருவரும் ஒடிப்போதலும் தொடர்ந்து பின்சென்ற பட்டன் கீழே விழுதலும் இன்னாபிடியென்று" அக்காளுந் தங்கையுஞ் சேர்ந்து இருண்ட செடிக்குள்ளே நுழைந்துமே போகிறார்கள் ஒடி மின்னலைப் போலொத்த பெண்களைக் காணாமல் கூடி பின்னாலே வருகிறாரே துள்ளிச்சாடி பெண்களுக்குப் புண்ணியம் உங்கள்கூட நானும் வாரேன் பேசாம லோடுகிறீர்கள் மறுமொழி கூறேன். உள்பதர்த்தங் கொண்டு ஓடுகிறார் சூறாவளிபோல் உத்தமனஞ் சாணத்தி யொத்தைவழி' யாகத்தானே ஒட்டமுந் தாகமும் வெயிலும்பொடி சூடுங்கொண்டு உத்த முத்துப்பட்டன் கீழ்விழுந்தான் மையல்கொண்டு பெண்களிருவரும் தகப்பனிடம் நடந்தவற்றைக் கூறல் ஒட்டமாய் தகப்பனுடைய கிடையைப்போய்க் கண்டு வாலப் பகடையுடன் சொல்லுவாள் செய்திவிண்டு பெண்கள் : அரசடி துறையிலிருந்து ஒரு பார்ப்பான் வந்து 4. * அக்காயுை மென்னையும் கோரணி' செய்தான் துணிந்து