பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. நிலாவெள்ளை வெள்ளை நிலாவே,
வெளியில் வந்து உலாவே.
ஒன்று, இரண்டு, மூன்று.
என்ப தற்குள் தோன்று.
நான்கு ஐந்து, ஆறு,
நாங்கள் சொன்னோம் பாரு.
ஏழு, எட்டு, ஒன்பது,
ஏன் வராமல் நிற்பது?
பத்து, நூறு, ஆயிரம்,
பறந்து வாநீ சீக்கிரம்.

12