பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





14. மயில்



பச்சை மயிலே! இங்கேவா ;
பாலும் சோறும் வேண்டாவா ?
இச்சை யுடனே நான்தருவேன் ;
இன்பாய் என்னுடன் ஆடிடவா.

அழகாய் உன்னைப் போலவே
அசைந்து நானும் ஆடவே
பழக வேண்டும் பொன்மயிலே !
பார்க்கச் சற்றே ஆடிடவா.

இத்தனை கண்கள் தோகையிலே
எழுதித் தந்தவர் யார்மயிலே ?
அத்தனை கண்கள் எனக்கிலையே!
அமைத்தவர் யாரெனத் தெரியலையே

14