பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்துப்பாடல்கள்.pdf21. காந்தித் தாத்தா

உண்மை பேச அஞ்சமாட்டார்
காந்தித் தாத்தா
நானும் அவர் போல்நடப்பேன்
நல்ல பாப்பா.
ஒற்று மைக்கே பாடுபட்டார்
காந்தித் தாத்தா
நானும் அவர் போல்நடப்பேன்
நல்ல பாப்பா.
உலக மெல்லாம் பேரெடுத்தார்
காந்தித் தாத்தா
நானும் அவர் போல்நடப்பேன்
நல்ல பாப்பா.

22