பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[28] பரிண்டியன் குதிரைமீதாயினும் யானைமீதாயினும் ஏறிக் கொண்டு உலாப்போதல் வழக்கம். அங்ங்ணம் போகுங்கால் அவனைக் காணும் எல்லோரும் வணக்கம் செலுத்துவர். மகளிர் நாணத்துடன் வாயிற் கதவைச் சிறிது மூடிய வண்ணம் வைத்து அதன் மறைவி லிருந்துகொண்டு அவனைத் தொழுவர். ஒரு சமயம் பாண்டியன் குதிரைமீது உலாப்போகுங்கால் அவ னைப் பார்க்கும் கங்கையொருத்திக்கு அவன்மீது அளவுக்குமீறிய காதல் ஏற்பட்டுவிடுகின்றது. அவன் ஏறிச்செல்லும் குதிரையோ அழகுமிக்கது ; போர்த்தொழிலிலும் அது கன்கு பழகியிருந்தது. அந்தக் குதிரை உலாவில் மிக வேகமாகப் பாய்ந்து வருகின்றது. அவா கிறைந்த அந்த அணங்கு குதிரையுடன் பேசுகின்ருள்: பாய்ந்து செல்லும் பரியே, போர்க்களத்தில்தான் உனக்கு இத்தகைய வேகம் தேவை. அங்கு இங்ங்னம் ஓடுவது சரியே. ஊருக் குள்ளுமா இங்ங்னம் ஓடவேண்டும்? இங்குத்தான் பகைவர்கள் இல்லையே. மெதுவாக கட. கதவருகே கின்று நோக்கும் யாம் மாறனது மார்பினைக் கண்டு வணங்கவேண்டும் ' என்று இயம்பு கின்ருள். இந்த நிலையைக் கவிஞரின் சொற்படம் காட்டுகின்றது: போரகத்துப் பாயுமா பாயா துபாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ-கூர்வேல் மதிவெங் களியான மாறன்றன் மார்பங் கதவங்கொண் டியாமுந் தொழ. இது கைக்கிளை , மகள் மாவை நோக்கிப் பேசுவது. (பா - வே) 3.4 பாயாது பாயுமா.