பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலியே பயிரைத் தின்ருல் : 75 இங்கிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் : வழுவிலெம் விதியுண் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோனலமுங் கொண்டான்-இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ ஆச லினி. இது கைக்கிள, தலவி தோழிக்கு உற்றதுரைத்தது; நெஞ் சிற்கு உரைத்ததாகவும் கொள்ளலாம். - விளக்கம்: வழு குற்றம், மாறன் - பாண்டியன். தோள் கலமும் கொண்டான் - கெஞ்சம், காணம், கைவளை இவற்றுடன் தோளின் வனப்பை யும் கவர்ந்துகொண்டான். இமிழ் திரை - ஒலிக்கின்ற அலை. கார்க்கடல் . கரிய கடல். கொற்கை கடற்கரைக்கு அருகிலுள்ளதும் முத்துக்குளிக்கும் துறையையுடையதுமான பாண்டியரது பட்டினம். காவலன் - அரசன் , மக்களைப் பாதுகாத்து நீதியை வழங்குபவன் என்ற பொருளில் வந்தது. யார்க்கு இடுகோ பூசல் இனி - இனிமேல் யாரிடத்தில் சென்று குறையைச் சொல்லி முறையிடுவது, கள்வனும் காவலனும் ஒருவராக இருக்கும் பொழுது : 'யார்க்கிடுகோ பூசல் இனி? என்ற கங்கையின் நளினக் குரலில் ஏக்க பாவம் தொனிக்கின்றது. இந்த அடியினைத்திரும்பத் திரும்ப ஈனக்குரலில் பாடி இப்பாவத்தை அறிக. (30)