பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது யாருக்குத் தெரியும்? 85 இது கைக்கிளை, தோழியிடம் கூறியது. விளக்கம் : அறிவார் யார் - என் உள்ளக் கிடக்கையை அறிந்த வர்கள் யாவர். பெண்டிரே மாக - மனைவியராக. செறிவு வீட்டில் அடைத்து வைக்கும் காவல். செறிவார் தலைமேல் நடந்து - இற்செறித்து வைப்ப வருடைய கட்டுக் காவலையும் கடந்து. மதுரையார் கோமானை அடையும் வழிவகையை அறிந்து விட்டால் எம்மைக் காப்பவரின் தலைமேல் நடந்து செல் லும் காலமும் வரும் என்றவாறு. எப்படியும் மதுரையார் கோமானுக்கு மனைவியாக ஆவேன். இப்பொழுது என்னை இற்செறிப்போர் எமது எதிர்கால நிலையை அறியாதுள்ளனர். எம்மைக் காப்போரைக் கடந்து செல்லும் காலமும் வரும் என்று தலைவி கூறியதாகக் கொள்ளினும் அமையும். தலைமேல் கடத் தல் இகழ்ந்து காவலையும் கடந்து செல்லுதல். தலைமேல் மிதித்தல் - இழிவு படுத்தல். அலரெடுத்த, ஊராரை உச்சிமிதித்து என்ற கலிப்பாட் டடியையும் காண்க. மறிதிரை - மடங்கி மடங்கித் திரைத்துத் திரைத்து வருகின்ற அலைகள். மாடம் உரிஞ்சும் - பெரிய மாடங்களில் உராய்ந்து கொண்டு செல்லும். கோமான் - அரசன். கூட ஒரு நாள் பெற ஒரு கான் கூடப்பெறுவதற்கு என்றவாறு. ஆரறிவார் யாம் ஒருநாள் பெண்டிரேமாக -என்பதில் கங்கை யின் காதல் துடிப்பும் மன உறுதியும் புலளுகின்றன. (35) க் காலடி - 61. கலி - 104