பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழி தெரியவில்லையே! 39 இதற்கு வழி தெரியவில்லையே ஒரு தடை அகன்ருல் வேருெரு தடை வந்து குறுக்கிடுகின்றதே. என் துன்பம் தீரும் வழியில்லையே. என்செய்வேன்? ' என்கின்ருள். கங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது: நாணுக்காற் பெண்மை நலனழியு முன்னின்று கானுக்காற் கைவளையுஞ் சோருமால்-காணேனுன் வண்டெவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டெவ்வந் தீர்வதோ ராறு. இது கைக்கிளை; தலைவி தோழிக்கு உரைத்தது. விளக்கம் : காணுக்கால் நாணத்தை விலக்கி உறுதியோடு பார்ப் போம் என்ருல். பெண்மை கலன் - பெண் தன்மைக்குரிய பண்புகள், காளுக் கால் பார்க்க வேண்டாம் என்று இருந்து விட்டால், கைவளையும் சோரு மால் - கையிலுள்ள வளையல்கள் கழன்றுவிடுகின்றன. ஆல் - அசை. வண்டு எவ்வம் தீர்தார். வண்டுகளினுடைய பசித்துன்பத்தைத் தீர்க்கும் அளவிற்குத் தேன் கிறைந்த மலர் மாலையை அணிந்த எவ்வம்-துன்பம். வயமான் - வலிய குதிரை. வழுதி - பாண்டியன். கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு சந்தித்துக் காதல் துன்பத்தை நீக்குவதற்கான வழியை, ஆறு - வழி. காணேன் கான் . என்ற தனிச் சீரினக்கொண்டு முடிக்க. காணுக்கால் கைவளையும் சோருமால் என்று தலைவி சொல்லு வதில் எவ்வளவோ ஏக்கம் பொதிந்து கிடக்கின்றது. பன்முறை சொல்லிச் சொல்லிப் பார்த்தால் இந்த ஏக்கம் நமக்கும் புலணுகும். காணேன் நான் என்ற தனிச்சீரில் திகைப்புப் பாவம் கொப்புளிக் கின்றது. அது பாட்டுக்குள்ளும் பாய்ந்து வழிகின்றது; பாட்டைப் பாடும் நம் இதயத்தையும் அது நிரப்பி விடுகின்றது. (37)